அம்பேத்கர் ஒரு சீர்திருத்தவாதி மார்க்சியத்தை மறுத்தவர்.

அம்பேத்கர் ஒரு சீர்திருத்தவாதி மார்க்சியத்தை மறுத்தவர். எதிர்த்தவர் .கம்யூனிஸ்ட்களுடன் என்னால் நிச்சயமாக உறவு ஏற்படுத்திக் கொள்ள இயலாது நான் கம்யூனிஸ்டுகளின் உறுதியான எதிரிஎன்றார். பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உடையவர் வீழ்ந்தால் கம்யூனிஸம் வந்து விடுமே என பதறினார். பாட்டாளி வர்க்கத்தின் வன்முறையையும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் நிராகரித்தார். கருணையின் மூலம் மனித மனங்களை மாற்றவேண்டும் என்றும் அதை அடைய புத்தரின் வழியை பரிந்துரைத்தார். மார்க்சியத்திற்கு புத்த மதமே மாற்று என்றார். தன்னால் இந்த சமூகத்திற்கு ஏதேனும் நன்மை விளைந்தது என்றால் தன்னிடமிருந்த மத உணர்வே அதற்கு காரணம் என்றார். மனிதனுக்கு மத நம்பிக்கை அவசியம் என்று மத சீர்திருத்தம் பேசினார்.

1928 29வது ஆண்டுகளில் நடைபெற்ற பம்பாய் தொழிலாளர் வேலை நிறுத்தங்களில் தொழிலாளர்களை கலந்துகொள்ள கூடாது என்று கூறி “தொழிலாளி வர்க்கத்தின் அரணாக நின்றார்”. கரும்புத் துண்டு காக ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளும் எறும்புகளைப் போன்ற கம்யூனிஸ்டுகள் இடம் ஜாக்கிரதையாக இருக்கும்படி அவர் தனது ஆதரவாளர்களை எச்சரித்தார்.

தாழ்த்தப்பட்டவர்கள் பிரச்சினையில் காந்தி நேர்மை யாளரும் இல்லை யோக்கியமான வரும் இல்லை என்றவர்,தாழ்த்தப்பட்டவர்களின் உரிமையா? இந்திய மக்களால் கடவுளாக கருதப்படும் காந்தியின் உயிரா ? மனிதாபிமான அடிப்படையில் இரண்டாவதை தேர்வு செய்தேன் என்றார். (பூனா ஒப்பந்தம் )

“வெள்ளையனே வெளியேறு ” என்று மக்கள் வெகுண்டெழுந்து போராடிக் கொண்டிருந்த பொழுது தொழிலாளர் நல அமைச்சராக இருந்து “புரட்சி” செய்து கொண்டிருந்தார் ! கூட்டு சேரா கொள்கைக்கு எதிர்ப்பு சோசலிச நாடுகளை தவிர்த்த முதலாளித்துவ நாடுகளுடன் கூட்டு தேவை என்றார்.

மொழி வாரி மாநிலங்கள் நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்து விளைவிக்கும். இந்தியே மாநில ஆட்சி மொழியாக இருக்கவேண்டும் , கூட்டாட்சி முறையைக் காட்டிலும் மையப்படுத்தப்பட்ட ஒற்றை ஆட்சி முறையே சிறந்தது. ஆங்கிலமே பாட மொழியாக இருக்க வேண்டும் என தேசிய இனங்களின் “உரிமைக்காக ” உரக்கக் குரல் கொடுத்தார். பெண்கள் வீட்டு நிர்வாகத்தை கற்றுக்கொண்டால் போதாதா ? என்று “பெண்ணுரிமைக்காக” குரல் கொடுத்தார் !

அரசியலமைப்பு சட்டத்தை உத்தரவிற்கிணங்க எழுதிய ஒரு எழுத்தாளி யாகவே தான் செயல்பட்டேன் என்றதுடன் , இந்திய அரசியலமைப்பை நான்தான் உருவாக்கினேன் அதே சமயத்தில் தீ வைத்து கொளுத்தி வதிலும் நானே முதல் ஆளாக இருப்பேன் என்றார்.

சாதி தீண்டாமைக்கு நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையே அடித்தளம்,.அதை தகர்ப்பது என்பதற்கு மாறாக,சாதி முறைக்கு மதத்தை காரணமாக கருதி “நிழல் மீது யுத்தம் தொடுத்த” சாதி ஒழிப்பு வரலாற்று கருத்துமுதல்வாத நாயகர்களில் அம்பேத்கர் மாபெரும் மனிதர் ஆவார்.