கட்சி அல்லது அமைப்பு என்பது பொதுமக்களிடம் நிதி வசூல் செய்து கட்டப்பட்டு செயல்படுகிறது. மேலும், பொதுமக்களின் அரசியல் பொருளாதாரம், பண்பாடு குறித்து விவாதித்து முடிவெடுக்கிறது. அதனால் கட்சியின் அரசியல், அமைப்பு பிரச்சினைகளை தெரிந்து கொண்டு விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு.
கட்சி அல்லது அமைப்பில் இருப்பவர்கள், அரசியல் பொருளாதாரம், பண்பாடு போன்றவற்றை விவாதிக்காமலும், பொதுமக்களிடம் நிதி வசூல் செய்யாமலும் இருந்து விவாதித்தால் அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. அது அந்த அமைப்பின் அல்லது கட்சியின் தனிப்பட்ட உரிமையாகும்.