அமைப்பு பிரச்சினை மிதான விவாதம்-சிபி
அமைப்பு பிரச்சினை மிதான விவாதம்-சிபி

அமைப்பு பிரச்சினை மிதான விவாதம்-சிபி

Dharmar Dharmarr இதிலுள்ள மூன்று கேள்வியும் அதற்கான ஊதாரணமும் சுகிசிவம், அர்ஜீன் சம்பத் போன்றவர்கள் கேட்கலாம் ஆனால் மா-லெ அமைப்புகளை பற்றி பேசுவதாக கூறிவிட்டு மக்கள் அதிகார அமைப்பை குறிப்பிடுவது என்ன நோக்கம் என்று தெரியவில்லை.
மக்கள் ஆதிகார அமைப்பு மா-லெ சிந்தாந்த கோட்பாட்டை கொண்டு செயல் படுவதாக எந்த இடத்திலும் சொல்லவில்லை.

  • Palani Chinnasamy சுட்டி காட்டியமைக்கு நன்றி தோழர், மக்கள் அதிகாரம் பேசும் அந்த அமைப்பு சீரழிந்து போனதை சொல்லலாம் ஆனால் அதன் புரோமோட்டர் அடிப்படையில் பேச வேண்டியுள்ளது, மேலும் நீங்கள் கூறும் சுகிசிவம் அர்ஜீன் சம்பத் மதம் என்ற கட்டுதளை கொண்டு மக்களை வலை விரிக்கிறான், இங்கோ மக்களின் மனதில் உள்ளதை ஆம் அவனுடன் தினம் பழக்கத்தில் உள்ள உதாரணங்களை பயன்படுதுவது மத அடையாளத்தை கையாள அல்ல இலகுவாக புரிந்து கொள்ளவே, இவை மாவோ குறிப்பிடும் மக்கள் மொழி போல் வெளிப்படுத்த முயற்ச்சியே.
    • Dharmar Dharmarr Palani Chinnasamy மாவோ கூறிய மக்கள் மொழி வேறானது தோழர்.ஆனால் இந்திய ஆன்மீகம் மக்களை மடையர்களாக மாற்றும் ஏமாற்று மொழி.

      ஆகையால் இதை தவிர்த்து நேரடியாகவே எந்தெந்த அமைப்புகள் எவ்வாறு தவறு செய்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுவது தான் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

      நான் ஏற்கனவே செயல்பட்டேன் என்ற அனுபவத்தில் SOC பற்றிய விமர்சனம் என்பது இந்தியா பற்றிய தனது ஆய்வுகளை மறுபரிசீலனை செய்து நடப்பு சூழ்நிலைக்கு தகுந்தது போல நடைமுறை போராட்ட முறையை மாற்றிக்கொள்ளாததும் , அணிகளின் மனநிலை பற்றி கருத்து கேட்காமல் மேலிருந்து கீழ் நோக்கி அதிகாரம் செலுத்தியதுமே தொய்வு ஏற்பட்டதிற்கு காரணம் என அறிகிறேன். இது சரி செய்யக்கூடியது தான்.
    • Palani Chinnasamy Dharmar Dharmarr நவகிரக போக்கு என்று நான் சுட்டிக்காட்டி உள்ளமைக்கு மாற்று கூறுங்கள் இங்குள்ள ஒவ்வொரு குழுவின் போக்கை வேறு எப்படி விளக்குவது நீங்கள் கூறுங்கள் தோழரே
      •  
    • Palani Chinnasamy தோழர் நீங்கள் பேசும் நாத்திகவாதம் சமூகத்தில் இன்னும் வளரவில்லை இதனை வேறு ஒரு மொழியில் சொல்வதானால், 40 ஆண்டுகள் சினிமாவில் கோலோச்சிய எம்ஜியாரை கடவுளாக நினைக்கும் மக்கள் பல நூறு ஆண்டுகளாக வாய்வழிகதையாகவும் நாடகம் இன்னும் என்னெவோ வடிவங்களில் மக்கள் மனதில் படர்ந்திருக்கும் கடவுள் பாத்திரத்தை துடைத்தெறிவ்தென்பது இந்த சமூக மாற்றம் அடையாமல் சாத்தியம் இல்லை ஆகவே இங்கு பயன்பாட்டில் உள்ள சொல்லாடலை கையாண்டேன் தோழர் வேறு எதாவது இருந்தால் தெரிவிக்கவும் தோழ்ர்.
    • Dharmar Dharmarr Palani Chinnasamy தோழர் நீங்கள் மக்களுக்கு எழுதவில்லை…மா-லெ அரசியலை விரும்பும், ஏற்றுக்கொண்ட / புரட்சியை விரும்பும் நபர்களுக்கு, அவர்களின் கருத்தை அறியவிரும்பியதால் அப்படி குறிப்பிட்டேன்.மற்றபடி தங்களின் கருத்தில் நானும் உடன்படுகிறேன்.

      மேலும் நீங்கள் குறை கூறும் CPI, CPM ம் கூட மக்கள் விரும்புகிறார்கள் என்று தானே அனைத்து கடவுள் விழாக்களையும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
    • Palani Chinnasamy தோழர் நீங்கள் சோசலிச சமூகத்தில் வாழ்கின்றீர்களா இன்று அல்லது நீங்கள் அதன் தாக்கத்தில் இருந்து விடுபட்டு விட்டீர்களா? இந்த பாழா போன எல்லாவற்றையும் ஏற்றோ ஏற்காமலோ ஒதுங்கியோ இந்த சமூகத்தில் உள்ளேதான் உள்ளோம் ஆகவே இந்த மொழி பயன்பாடு தவறு என்று பார்ப்பது தி.க வின் பார்வையே மார்க்சிய பார்வை அல்ல இதனை பற்றி முனைவர் கோ.கேசவனின் நூல்களே சான்று தோழரே
    • Palani Prabagar இந்தியாவின் ஒரு ஒன்றுபட்ட புரட்சிகர கட்சியை கட்ட வேண்டும் என்கிற நோக்கில் பதியப்பட்ட பதிவாகவே நான் இதை பார்க்கிறேன்.
      எனக்கு இதைப் படிக்கும்போது இயல்பாகவே சில வினாக்கள் எழுகின்றன அதாவது…..
      புரட்சியை நடத்த ரகசிய அமைப்புகளை அதாவது தலைமறைவு கட்சிகளை கொண்டுள்ளவர்கள் பொதுவெளியில் இதைப் பற்றி விவாதிக்க முன்வருவார்களா?
      நீங்கள் கூறும் விவசாயி- தொழிலாளி கதையில் அனைத்து அமைப்புகளும் பிரச்சாரம் செய்கின்றன என்றும் ஏன் அனைவரும் ஒன்று சேர மாட்டீர்கள் என்பது போல் கூறுகிறீர்கள்.
      பிரச்சாரம் அனைவரும் செய்கின்றனர் ஆனால் அதற்கு அடுத்த கட்ட நகர்வாக போராட்டம்- அரசியல் போராட்டம் -ஆயுதப் போராட்டம் என்ற நிலைகளை தாண்டி மக்களையும் கட்சியையும் வழி நடத்துபவர்களே உண்மையில் தங்களது இலக்கை அடைவார்கள்.

      நடைமுறையில் தத்துவார்த்தப் போராட்டத்துடன் வர்க்கப் போராட்டத்தை இணைத்து மக்களை வழிநடத்திச் செல்லும் அமைப்புகளே ஒன்றிணைய சாத்தியப்பாடுகள் அதிகம்.

      மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மய்யம்,கட்சி ஐக்கியம் , மக்கள் யுத்தக் கட்சி இன்னும் பிற அமைப்புகள் இணைந்து தங்களது போராட்டத்துடன் நடைமுறையில் ஒன்றிணைந்து இந்திய அளவில் மாவோயிஸ்ட் கட்சியை உருவாக்கியுள்ளனர்.
      இந்த ஒன்றுபட்ட கட்சியை நீங்கள் பாரா முகத்துடன் இருப்பது ஏனோ?
      அதுகுறித்து உங்களது பதிவுகளில் ஒரு விமர்சனக் கண்ணோட்டம் கூட இல்லையே ஏன்?
      சில அமைப்புகளுக்கு அடிப்படை ஆவணங்களான கட்சி திட்டம், அரசியல் தீர்மானம் ,மூல உத்தி செயல் உத்தி ,அரசியலமைப்பு மீளாய்வு ஆவனம் -என இவைகளில் சில ஆவணங்கள் இல்லாமலே கூட அமைப்பு நடத்துகின்றனர் இவர்களுடன் எந்த ஆவண அடிப்படையில் ஒன்றிணைய பேச்சு வார்த்தை நடத்தமுடியும்?
      தத்துவார்த்தப் போராட்டத்துடன் நடைமுறையில் இணைந்து இயங்கும் அமைப்புகளே நாளடைவில் ஒன்றிணைய வாய்ப்புகள் உள்ளன என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை!
  • Palani Chinnasamy தோழர் இவை பல ஆண்டுகளுக்கு முன் உங்கள் அமைப்பு மீது SOC வைத்த விமர்சனம் ஆனால் அதை உங்கள் அமைப்பு கயாண்ட விதம் தோழமையோடு அல்ல ஆகவே நான் தனி மனிதர் எழுதி ஒன்றும் ஆக போவதில்லை. எனது ஒரு கேள்வி இன்று CPI,CPM திருத்தல்வாதிகள் என்று ஒதுக்கி விட்டோம் ஆனால் குறுங்குழு பாதையில் பயணிக்கும் அமைப்புகளை ஒன்றிணித்து ஒரு மாற்று சக்தியாக வளர நீங்கள் செய்தவைதான் என்னே?இந்த புத்தகம் சொல்வதை அறிந்து பதில் தாருங்கள் நேரம் உள்ள போது. http://www.padippakam.com/…/document/M_Books/m000221.pdf
  •  · Palani Prabagar SOC அமைப்பின் விமர்சனமும் அதற்கான பதிலும் ஏற்கனவே அனைவரும் அறிந்ததே!
    ஒருங்கிணைவு குறித்து ஆதங்கப்படும் தாங்கள் இதனை பதிவிடுவது அபத்தமானது அல்ல அபாயமானது தங்கள் நோக்கத்திற்கு!
    MCC மற்றும் மக்கள் யுத்தக்கட்சிகளுக்கிடையேயான மோதல்களும், படுகொலைகளும் அனைவரும் அறிந்ததே அவர்களே தொடர் முயற்சி மற்றும் புரட்சியின் நலனிலிருந்து ஒன்றிணைந்து மாவோயிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது!
    இரு அமைப்புகளுக்கு சிண்டு முடியும் தாங்கள் ஒன்றுபட்ட கட்சி கட்ட எத்தனிப்பது நம்பிக்கை அளிப்பதாக இல்லை!
    ஒருங்கிணைந்த மாவோயிஸ்ட் கட்சி குறித்து தாங்கள் பேச மறுப்பது தங்களின் மனோபாவத்தை காட்டுகிறது!
    • Palani Chinnasamy Palani Prabagar மாவோஸ்ட் கட்சி அல்ல என்பது எனது நிலைபாடு அதே போல் இன்று பலம் பொருந்திய மா-லெ அமைப்புகளின் பெரியாண்ணன் மாவோஸ்ட் என்றால் சிதறி கிடக்கும் அமைப்புகளை ஒன்று படுத்தி கருத்தியல் போராட்டம் நடத்தி எல்லா குழுக்களையும் ஒன்றுபடுத்தி ஒரு கட்சி கட்ட முயற்ச்சிகாமை ஏனோ? லெனின் 1895 செய்த பணியினை செய்ய வேண்டியது ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் பணியல்லவா? எனது விமர்சன்ம் நீங்கள் கேட்டும் ஒன்றும் ஆக போவதில்லை இன்றை நாட்டின் புரட்சியை தீர்மானிக்கும் சக்தியாக NGO கள் உள்ள போது இன்னமும் பல கட்ட வளர்ச்சி நமக்கு தேவை தோழர்

Palani Prabagar Palani Chinnasamy மாவோயிஸ்ட் கட்சி அல்ல என்கிற (கண்டுபிடிப்பு ) நிலைப்பாட்டிற்கும் , ஒருங்கிணைவு குறித்த அணுகுமுறைக்கும் மகிழ்ச்சி!
நன்றிகள்!!

  • Palani Chinnasamy Palani Prabagar கண்டு பிடிப்பல்ல தோழரே ஒரு நாட்டில் புரட்சி நடத்த ஒரு கட்சியால் மட்டுமே முடியும், ஒவ்வொரு குழுவும் தனித்தனியாக போராடி என்னத சாதிக்கும், முதலில் வரலாற்றில் ஆம் மார்க்ஸ் முதல் மாவோ வரை வர்லாற்றில் கட்சி பற்றி வரையரை என்ன என்று தெரிந்து பேசுங்கள்
    •  ரஷ்யாவில் ஆரம்பத்தில் பல மார்க்சிய குழுக்கள் இருந்தன. இந்த குழுக்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் தொழிலாளர் விடுதலைக்குழுவைச் சேர்ந்த லெனின் முயற்சி செய்தார். அதற்கு ஆதரவாக பிளக்னோவ் இருந்தார். அவர்களது முயற்சியால் கட்சிக்கு ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டது. அந்த திட்டத்தை பல குழுக்கள் மத்தியில் கொண்செல்லப்பட்டு அத்திட்டத்தை ஏற்றுக்கொண்ட குழுக்களை ஒன்றுதிரட்டி சமூக ஜனநாய தொழிலாளர் கட்சி உருவாக்கப்பட்டது. கட்சி உருவானபோதே கட்சிக்குள் இரண்டுவிதமான கருத்துக்கள் உருவானது. இவ்விரு கருத்துக்கொண்டோரும் போல்ஷ்விக், மென்ஷ்விக் ஆகிய இருபிரிவினரும் வெவ்வேறு குழுக்களாக ஒரே கட்சிக்குள் இணைந்து செயல்படுவது என்ற முடிவெடுத்து கருத்துவேறுபாடுகளுக்கு ஊடாகவே ஒரே கட்சி அமைப்பிற்குள் இணைந்தே செயல்பட்டார்கள். மென்ஷ்விக்குகள் இறுதியாக கலைப்புவாதிகளாக மாறியபின்பு கலைப்புவாதிகளை கட்சியிலிருந்து வெளியேற்றுவது என்ற கட்சியின் தீர்மானத்தின் அடிப்படையில் மென்ஷ்விக்களை வெளியேற்றிவிட்டு போல்ஷ்விக்குகள் மட்டுமே போரிட்டு சோசலிசப் புரட்சியை நடத்தி முடித்தார்கள்.
      ஆனால் இந்தியாவில் ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சிபோல் இல்லாமல் கட்சியானது இந்திய கம்யூனிஸ்டு கட்சி என்ற பெயரில் ஒரே கட்சியாகவே உருவானது. மேலும் ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சிக்கு இருந்ததுபோல் திட்டம் ஏதும் கட்சிக்கு பல ஆண்டுகளாக கிடையாது. அக்கட்சியிலிருந்து பிரிந்துபோனவர்களுக்கும் ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சிக்கு இருந்ததுபோல் விஞ்ஞானப் பூர்வமான திட்டம் கிடையாது. இதுதான் இந்திய பொதுவுடமை இயக்கத்தின் மிகப்பெரிய பலவீனமாகும். சில கட்சிகள் தங்களுக்கென்று சரியான விஞ்ஞானப் பூர்வமான திட்டம் இருப்பதாகக் கருதுகிறார்கள். அவர்களது திட்டம் சரியானதாக இருந்தால் அந்த திட்டம் வெற்றி பெற்றிருந்தால் மக்கள் அவர்களை ஆதரிப்பார்கள். அந்த கட்சியை நோக்கி பல அமைப்புகளிலுள்ளவர்களும் வந்து சேர்ந்திருப்பார்கள். அக்கட்சியும் வளர்ச்சியடைந்திருக்கும். அப்படி ஏதும் இங்கு நடக்கவில்லை மாறாக குழுக்கள் சிறுகுழுக்கலாக சிதைந்திருக்கிறது கட்சிகள் மக்களின் செல்வாக்கை இழந்துள்ளனர். இந்த நிலை எதைக் காட்டுகிறது. எந்தக் கட்சியிடமும் சரியான திட்டம் இல்லை என்பதையே காட்டுகிறது. இன்னும் சிலர் தங்களுக்கு என்று திட்டம் எதுவும் இல்லாமலேயே மற்றவர்களின் திட்டம் அடிப்படையில் சரி என்று ஏற்றுக்கொண்டு செயல்படுகிறார்கள். அடிப்படையில் சரி என்றால் முக்கியமற்ற விசயங்களில் மட்டுமே அது தவறான திட்டமாகும்.அதாவது முக்கியான விசயங்களில் அது சரியான திட்டமாகும். இவ்வாறு பிறரது திட்டத்தை ஏற்றுக்கொண்டபோதும் அவர்களது அரசியல் செயல்பாடானது அந்த திட்டவகைப்பட்டதாக இல்லை. நிலப்பிரபித்துவத்திற்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடே முதன்மையான முரண்பாடு என்று அந்தத் திட்டம் சொல்கிறது. அதற்கு தீர்வு வியவசாயப் புரட்சி என்று சொல்கிறது. ஆனால் இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்ட இவர்கள் விவசாயிகளை திரட்டி விவசாயப் புரட்சி செய்யவேண்டும் என்று பிரச்சாரம் செய்ததில்லை. மாறாக அமெரிக்க ஏகாதிபத்திய புதிய காலனியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள். அதன் மூலம் நாட்டிற்கும் காலனியாதிக்கவாதிகளுக்கு இடையிலான முரண்பாடே முதன்மையான முரண்பாடு என்றே இவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் இவர்களது அரசியல் பிரச்சாரத்திற்குப் பொருத்தமாக இவர்களிடம் திட்டம் இல்லை. இத்தகைய சூழலில் இந்திய பொதுவுடமை இயக்கத்திற்கு முன்னால் திட்டப் பிரச்சனை முதன்மையாக உள்ளது. மாபெரும் ஆசான் லெனினது வழிகாட்டல்படி திட்டப் பிரச்சனையை தீர்க்காமல் கம்யூனிச அமைப்புகளை ஒன்றுபடுத்தவும் இயலாது. புரட்சிக்கு மக்களின் நம்பிக்கையைப் பெற்று அணிதிரட்டவும் முடியாது.தோழர் ரவீந்திரன் எழுத்தில் இருந்து
  • Palani Prabagar எனது பதிலை உள்வாங்காமல் ,தேய்ந்த ரிக்கார்ட் போல நீங்கள் என்ன செய்தீர்கள் என வினவுவது விவாதத்திற்கு அழகல்ல!
  • Palani Chinnasamy Palani Prabagar மாவோஸ்ட் கட்சி என்று கூறிக் கொண்டு இருங்கள் எனக்கு என்ன பிரச்சினை , நீங்களும் அரசியல் அறிவு பெறப் போவதில்லை அடுத்தவருக்கும் கொடுக்கப் போவதில்லை. நான் என்னே சொல்கிறேன் பெரியண்ணா, நாட்டில் புரட்சி வேண்டுமென்றால் எல்லா குழுவும் ஒன்றிணைய வேண்டும் அல்லது இல்லாமல் போக வேண்டும் ஏனெனில் மக்களை அணி திரட்ட, உங்கள் இணைப்பு தெரியாமல் நான் எழுதிக் கொண்டுள்ளேன் என்ற நினைப்பு உங்களுக்கு, நான் சொல்வதை உள்வாங்கி எழுதுங்கள் இல்லையேல் தெரியவில்லை என்று போய் தூங்குங்கள் நீீங்கள் நினைப்பதை விட உங்களின் எல்லா அரசியலும் அறிவேன் அதானால் தெரிந்தால் பேசுங்கள் இல்லையேல் ஓய்வெடுங்கள், நன்றி.
    •  

Bottom of Form

  • Sivakumar M நல்ல ஒரு ரைட் அப். இதில் வைக்கப்பட்டுள்ள கருத்துக்களுடன் உடன்படுகிறேன்.

நமது மார்க்சிய ஆசான்கள் தத்துவம் மட்டும் இன்றி நடைமுறையில் புரட்சியை நடத்தி அதில் ஏற்பட்ட சாதக பாதக நிலைகளை எழுதி வைத்து போயுள்ளனர், இங்குள்ள எந்த கம்யூனிச கட்சியோ மா-லெ பேசும் அமைப்போ அவர்களின் பாதையில் பயணிப்பதாக தெரியவில்லை… அதனை பற்றி பிறகு பார்ப்போம்… முதலில் தனது குறைகளை தெரிந்து அதனை நீக்க யாராவது சுயவிமர்சனத்திற்க்கு வந்தார்களா???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *