அமைப்பில் ஊடுருவி உள்ள சீரழிவு கலாச்சார பண்பு பற்றிய விவாதம் -1
அமைப்பில் ஊடுருவி உள்ள சீரழிவு கலாச்சார பண்பு பற்றிய விவாதம் -1

அமைப்பில் ஊடுருவி உள்ள சீரழிவு கலாச்சார பண்பு பற்றிய விவாதம் -1


அன்புத் தோழர்களே, நான் ஒரு தோழருடன் இரு நாட்களுக்கு முன் பேசியதன் அடிப்படையில் இந்தப் பதிவு.
ஏன் தோழர் அமைப்பில் உள்ள சில தோழர்களின் தவறான நிலைக்கு யார் காரணம்?.
பாலியல் சீரழிவு, சுயநலம், சந்தர்ப்பவாதம் தனது தேவைக்கா இதே சுரண்டல் தன்மையை கையாளும் இவர்கள் கம்யூனிட் பண்புள்ளவர்களா? என்றதற்க்கு அவரின் பதில் என்னை அதிர்ச்சிகுள்ளாக்கியது!!! ஆம் தோழர்களே அவர் கூறும் ஆசானின் எடுகோள் ஏற்புடையவை இல்லை என்பதே என் விவாதம்.நாம் வர்க்க சமூகத்தில் வாழ்கிறோம் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை ஆனால் இந்த ஒடுக்குவோரின் அதே குண நலன்களை ஒரு புரட்சிகர அமைப்பு தோழரும் பிரதிபளிக்கிறார் என்றால் அந்த அமைப்போ அந்த தலைமையோ மார்க்சிய சித்தாந்தத்தை உள்வாங்கிக் கொள்ளாவே இல்லை என்பதே என் வாதம்.அதாவதுபெண் எல்லா இடங்களிலும் அனைத்துச் சமூகத்திலும் ஒடுக்கப்பட்டாள். நவீன முதலாளித்துவத்தில் மேலும் ஒடுக்கப்பட்டாள்.. நாள் முழுவதும் செய்யப்படுகிற வீட்டு வேலைகளுக்குச் சம்பளமில்லாததால், அவள் உழைப்பிற்கு மதிப்பில்லாமல் போனது.
நிலவுடைமைச் சமூகம் வளர்ச்சி பெற்ற பின்பு, குடும்பம், பொருளாதாரம், அரசு நிறுவன அமைப்பு வரலாற்று அடிப்படையிலான ஆணாதிக்கப் போக்கினைப் பற்றி ஏங்கல்ஸ் குறிப்பிடுவது வரலாற்றுக்கு முந்திய புராதனமான சமூகங்களில் பெண்ணுக்குச் செயலூக்கமான பங்கிருந்தது. அது பின்னர் வேளாண்மைச் சமூக மாற்றத்தால் புதிதாக உருவான குடும்பம், நிலவுடைமை, அரசு ஆகியவற்றால் ஆணின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நிலைமையே பெண்ணுக்கான முழு வாழ்வாக அமையலாயிற்று என்று ஏங்கல்ஸ் கூறுகிறார்.இதிலிருந்து விடுபட்ட நபர் உண்டா? ஏனெனில் ஆண் பெண் உறவு முறை அதே சுரண்டலாளார்களை விட நாம் மாற வில்லை.
சில ஆண்டுகளுக்கு முன் நான் அறிந்த ஒரு பெரும் புரட்சியாளரின் பாலியல் குற்றசாட்டை அவரின் அமைப்புக்கு தெரிவித்த பொழுது அமைப்பு மவுனம் சாதித்தது மேலும் அவர் செய்த அட்டூழியங்களை சகிக்க முடியாத பெண்ணின் குரலுக்கு செவி சாய்த்த அமைப்பு அவரை தற்காலிகமாக அமைப்பைவிட்டு வெளியேற்றியதாக நாடகமாடியது திரும்பவும் அவர் அதே அமைப்பில் உள்ளார். முன்னால் தலைமை நீதிபதியும் இன்னாள் MP யுமான கோகாய் விசாணையை மிஞ்சும் இந்த செயல் எந்த வர்க்க புரட்சிக்கு உதவும் தோழர்களே?
தவறான கருத்தியல்களில் அழுந்தியிருக்கும் நம் சமுதாயம் விடிவுபெற இன்றைய கருத்து முதல் வாதம் சார்ந்த அக் கருத்தியல்கள் யாவும் உடைத்தெறியப்பட வேண்டும் அல்லவா அல்லது அதனோடே நாமும் ஒன்றிப்போவதா?.ஒரு புறத்தில் பசி, பட்டினி, அடக்குமுறை ஆகிய துன்பங்களை அனுபவித்துக் கொண்டுள்ள அந்த உழைப்பவரின் உழைப்பை அபகரித்து அடக்கி ஒடுக்கும் கொடுமை இவர்கள் பெரும்பான்மையினர்.
மறுபுறத்தில் உடல் உழைப்பிலேயே ஈடுபடாது சொகுசாக வாழும் சிறுபான்மையினர்.
இது ஒடுக்கும் கும்பலின் எல்லா சீர்ழிவுகளையும் தூக்கி எறிந்து பெரும்பான்மை உழைக்கும் மக்களின் துன்பம் துயரங்களுக்கு காரணமான இந்த ஒடுக்குமுறையை துடைத்தெறிவதா? அல்லது இதில் அமிழ்ந்து சீரழிந்துப் போவதா தோழர்களே….
விமர்சன்ம் சுய விமர்சனம் என்று நமது ஆசான்கள் சொன்னவை நேபகப் படுத்திப் பாருங்கள் தோழர்களே
உங்களின் கருத்துகளுக்கு பின் தொடருவேன்…

  • Dharmar Dharmarrஒருவர் தவறு செய்து அந்தத்தவறை அமைப்பின் விசாரணைக்குட்படுத்தி அவருக்கு தண்டனை கொடுத்து பின்னர் சுயவிமர்சனம் ஏற்று தவறைத்திருத்திக் கொண்ட நபரை பரிசீலனை காலத்திற்கு பிறகு திரும்ப அமைப்பில் சேர்க்கக் கூடாதா தோழர்?
    • Palani ChinnasamyDharmar Dharmarr ஆமாம் ஆமாம் ஒரு சீரழிவு கலாச்சார பேர்வழி திருந்தி விட்டான் போங்க தோழர் உங்கள் விளக்கம், இதனை பற்றிய முழு தகவல்களை யும் பகிர்வேன் தேவைப்படும் போது தோழரே
  • Vchinnadurai Duraiஎந்த அமைப்பு ,எந்த நபர் என்ன நிலமை என்று அறியாமல் நான் கருத்திடுவது ஞாயமா இருக்காது தோழர்.ஆனால் நீங்கள் குறிப்பிடும் கோளாரை நான் புரிந்துகொண்டு கண்டனம் செய்கிறேன்.கம்யூனிஸ்ட் என்று இல்லை எந்த ஒரு பொது மனிதனுக்கும் யாரையும் ஒடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை.1
  • Palani Chinnasamy replied ·1 Reply6h
  • தமிழ் முகில்ஒருவரை வைத்து அனைத்து இயக்கங்களையும் மதிப்பிட முடியாதல்லவா தோழர்
    • Palani Chinnasamyஇயக்கம் என்று சொல்கிறீர்களே அதில் இந்த குறைகள் இல்லையா அப்படி வந்தால் தீர்க்க என்ன வழிவகை செய்தீர் தோழரே… என் தொடர் பதிவை பார்த்து பதிலளிக்கவும் தோழரே
    • தமிழ் முகில்அனைத்திலும் முரண்பாடுள் உண்டு ஆனால் அவைகளை களைந்து முன்னேறுவதே தீர்வு.1
    • Palani Chinnasamyதமிழ் முகில் தவறுகளை களைந்து “விமர்சனம் சுய விமர்சனம் ரீதியாக தீர்க்காமல் குற்றம் சுமத்தியவரையே பலிகடாவாக்கி குற்றவாளியை காப்பது என்பது ஆளும் வர்க்க பண்பே அதாவது சுரண்டும் வர்க்க பண்பே அதிலிருந்து நாம் மீண்டிருக்கிறோமா என்பதே என் கேள்வி தோழரே?
  • Palani ChinnasamyPanner Selvam தோழர் பதில்…எழுத்துப் பிழை தோழர் நான் சரி செய்கிறேன் தோழர்…தோழர் பழனி சின்னசாமியின் பதிவுவொன்றினுல் கூடுதலான எனது குற்றதையும் முன்வைக்கிறேன் தோழர்களே . இவ்விடயத்தில் தொடர்புடைய தோழர் மீது வைத்த குற்றச்சாட்டை(பாலியல்) ஆய்வு செய்யும் அவர் சார்ந்த அமைப்பு விசாரணைக்கு தேவையான அனைத்து தரவுகளையும் ஆராயாமலேயே அதுவும் யார் குற்றசாட்டை வைத்தார்களோ அவரை நேரில் விசாரிக்காமலேயே குற்றச்சாட்டுக்கு உள்ளான தோழரை தற்காலிக இடைநீக்கமும் பின்பு பரிகாரமும் முடிந்து அமைப்பில் இணைத்துக் கொண்டார்கள் .குற்றம் சாட்டுக்கு உள்ளான தோழர் என்ன பரிகாரம் செய்தார் அமைப்பும் எப்படி திருப்த்தியடைந்தது எப்படி இணைத்துக் கொண்டார்களோ அந்த ஆண்டவனுக்கும் பூசை செய்யும் பூசாரிக்குமே வெளிச்சம் . இந்த புதைகுழியில் ஏராலமான பொக்கிஷசங்கள் பெட்டிபெட்டியாக புதையுண்டுள்ளது . இதை கண்டெடுக்க ஜெம்ஸ்பாண்ட் 007 தான் ஸ்காட்லாந்த் யார்டுல் இருந்து வரவழைக்க வேண்டும் . தோழ்ர குறிப்பிட விரும்புவது…அவர் தொலை பேசியில் கூறியதை வைத்தே நடவடிக்கை எடுத்தவர் அதன் உண்மை தன்மையை அறிந்துக் கொள்ளாமலே ஒதுங்கிப் போகும் போக்கை சொல்லி உள்ளார் தோழர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *