அமெரிக்கா பற்றி மாவோ
அமெரிக்கா பற்றி மாவோ

அமெரிக்கா பற்றி மாவோ

எல்லோரும் மக்களை ஒடுக்க விரும்புகின்றனர், ஆனால் இறுதியில் இவர்கள் எல்லோரும் மக்களால் வீழ்த்தப்பட்டனர். பிறரின் நஷ்டத்தில் இலாபம் பெற முயலும் எவரும் நல்ல முடிவை அடையமாட்டார்.

1945, ஏப்ரல் 24-ம் தேதி தோழர் மா சே துங் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஏழாவது தேசிய மாநாட்டில் கூட்டு அரசாங்கம் பற்றி என்ற தனது புகழ்பெற்ற அரசியல் அறிக்கையைச் சமர்ப்பித்தார். “எமது குறிப்பான வேலைத்திட்டம்’ எனத் தலைப்பிடப்பட்ட பகுதியில் அவர் ”தேசிய சபை ஒன்றைக் கூட்டுவதன் மூலம் மக்கள் விரோத சதிகார நடவடிக்கைகள் நடத்துவதற்கான கோமின்டாங் பிற்போக்காளர்களின் முயற்சிக்கு எதிராக எச்சரிக்கை செய்து, இந்தப் பிற்போக்குக் கொள்கையைப் பின்பற்றுவதன் மூலம் ”அவர்கள் தாங்களே தங்கள் கழுத்துகளில் சுருக்குக் கயிறுகளைப் போட்டுக்கொள்கின்றனர்” என்றும், அழிவை நோக்கிச் செல்கின்றனர் என்றும் முன்னறிந்து கூறினார்”,தோழர் மா சே-துங் கூறினார்:

எமது பிற்போக்குத் தீரர்கள் இந்தப் பிளவுபடுத்தும் கொள்கைக்கிணங்க எடுக்கத் தயாராகிவரும் நடவடிக்கைகள்

அநேகமாக அவர்களை அழிவுக்கு இட்டுச் செல்லும். அவர்கள் தாங்களே தங்கள் கழுத்துகளில் சுருக்குக் கயிறுகளைப் போட்டு, அதைக் கழுத்தில் இறுக்கியும் கொள்கின்றனர்; ”தேசிய சபையே இந்தச் சுருக்குக் கயிறாகும். அவர்களுடைய நோக்கம் ”தேசிய சபையை முதலில் கூட்டு அரசாங்கம் ஒன்று உருவாவதைத் தடுக்கவும், இரண்டாவதாகத் தங்கள் சர்வாதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ளவும், மூன்றாவதாக உள்நாட்டு யுத்தத்திற்கு ஒரு நியாயத்தைக் கற்பிக்கவும் ஒரு மந்திரக் கருவியாக உபயோகிப்பது தான். இருப்பினும் வரலாற்றின் தர்க்கவியல் அவர் களின் விருப்புகளுக்கு மாறாகச் செல்கிறது; அவர்கள் ”பாறையைத் தூக்கித் தங்கள் கால்களிலேயே போட்டுக் கொள்ளப்போகின்றனர்.”

ஹ்ஸின் ஹுஆ செய்தி ஸ்தாபனத்திற்காகத் தான் – 1945, ஜூலை 12-ந் ட்ி எழுதிய ஹேர்லி கொள்கை யின் அபாயம் பற்றி என்ற விமர்சனத்திற் தோழர் மாஓ சே – துங், சீனாவைக் குறித்த அமெரிக்கக் கொள்கை சீனாவில் ஒரு உள் நாட்டு யுத்த நெருக்கடியைச் சிருஷ் டித்திருந்தது எனச் சுட்டிக்காட்டினார்; சீன மக்களை விரோதித்துக்கொள்வதான அமெரிக்க கொள்கை அமெ ரிக்க அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ‘முடிவற்ற தொல்லையிற் போய் முடியும் என அவர் எச்சரித்தார்:

ஹ்ஸின் ஹுஆ செய்தி ஸ்தாபனத்திற்காகத் தான் – 1945, ஜூலை 12-ந் தேதி எழுதிய ஹேர்லி கொள்கையின் அபாயம் பற்றி என்ற விமர்சனத்திற் தோழர் மா சே – துங், சீனாவைக் குறித்த அமெரிக்கக் கொள்கை சீனாவில் ஒரு உள்நாட்டு யுத்த நெருக்கடியை உருவாக்கியிருந்த்தது எனச் சுட்டிக்காட்டினார்; சீன மக்களை விரோதித்துக்கொள்வதான அமெரிக்க கொள்கை அமெரிக்க அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ‘முடிவற்ற தொல்லையிற் போய் முடியும் என அவர் எச்சரித்தார்:

……. இதே ஹேர்லியின் கருத்துப்படி, சியாங் கே-ஷெக் பிரதிநிதித்துவம் செய்யும் கோமின்டாங் அரசாங்கம் அழகுத் தெய்வமாகவும் கம்யூனிஸ்ட் கட்சி குரூர மிருகமாகவும் மாறியுள்ளதாகக் காணப்படுகிறது: அத்துடன் இவர், அமெரிக்கா சியாங் கே- ஷெக்குடன் மட்டுமே ஒத்துழைக்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒத்துழைக்காது என்றும் பச்சையாகப் பிரகடனம் செய்துள்ளார். இது, இயல்பாகவே, ஆக ஹேர்லியின் தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல, அமெரிக்க அரசாங்கத்தில் உள்ள ஒரு முழுக் கோஷ்டியினரின் கருத்துமாகும். இது ஒரு தவறான கருத்தும் அபா

யகரமான கருத்துமாகும்…………ஹேர்லி கொள்கை தொடருமானால் அமெரிக்க அரசாங்கம் சீனப் பிற்போக்காகிய நாற்றமெடுக்கும் ஆழ்ந்த சகதிக்குள் மீளமுடியாதபடி அமிழும்; அது விழிப்புற்றுள்ளவர்களும் விழிப் புற்று வருபவர்களுமான பல பத்துக் கோடி சீன மக்களை விரோதித்துக் கொள்ளும் நிலையில் தன்னை இட்டுக்கொண்டு, தற்போதைக்குப் பதில் தாக்குதல் யுத்தத்திற்கும் வருங் காலத்தில் உலக சமாதானத்திற்கும் ஒரு தடங்கலாக ஆகும்……….. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். சீனாவில் உள்ள பிற்போக்கு சக்திகளுக்கு உதவியும் உடந்தையும் செய்வதும் அளப்பரும் எண்ணிக்கையினரான சீன மக்களை விரோதித்துக் கொள்வதுமான ஹேர்லி கொள்கை மாற்றமின்றித் தொடருமானால், அது அமெரிக்க அரசாங்கத்தின் மீதும் மக்களின் மீதும் தாங்க முடியாத ஒரு பழுவைச் சுமத்தி, அவர்களை முடிவற்ற தொல்லையில் அமிழ்த்தும். இந்த அம்சம் அமெரிக்க மக்களுக்கு உணர்த்தப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *