அநியாயமாக கொல்லப்பட்ட அப்சல் சிக்கியுள்ள தாவீந்தர் சிங்!அப்சல் குரு அப்பாவி நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட உண்மைக்குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்ற குரல்களை கணக்கில் கொள்ளாத உச்சநீதிமன்றம் கூட்டு மனச்சாட்சி என்னும் பெயரில் அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனை விதித்தது. எந்த குரலையும் கருத்தில் கொள்ளாமல் அப்சலின் மனைவி, மகனுக்குக் கூட தெரிவிக்காமல் தூக்கிட்டுக்கொன்றது காங்கிரஸ் அரசு.அப்போது அப்சல் குரு தன் வழக்கறிஞர் சுஷில் குமாருக்கு எழுதிய கடிதங்களில் தாவீந்தர் சிங் என்னும் காவல்துறை அதிகாரியைப் பற்றி விரிவாக குறிப்பிட்டிருந்தார். அப்பாவியான தன் வாழ்வை பணத்திற்காக மிரட்டி மிரட்டி எப்படி தூக்கு மேடை வரை கொண்டு வந்து நிறுத்தினான் இந்த அயோக்கியப்பயல் என்பதை விரிவாகவே எழுதியிருந்தார். அப்போது இந்த குரல்களைக் கேட்க எவரும் இல்லை. அப்சல் கொல்லப்பட்டு விட்டார். இதோ திவீரவாதிகளுடன் தொடர்பில் இருந்த தாவீந்தர் சிங் கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறான். தீவிரவாதிகளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது காஷ்மீரில் கைதாகியிருக்கிறான்.அப்சலை மிரட்டி அவரிடம் இருந்து அடிக்கடி பணம் பெற்று வந்த தாவீந்தர் சிங் டெல்லியில் முகமறியா ஒருவருக்கு வீடு எடுத்துக் கொடுக்கும் படி அப்சலை நிர்பந்தித்துள்ளார். வீடு எடுத்துக் கொடுத்தால் அப்சலை தொடர்ந்து மிரட்டுவதை கைவிட்டு விடுவதாகவும் , பணம் கொடுப்பதாகவும் அந்த அப்பாவிக்கு ஆசை காட்டி எவனோ ஒருவனுக்கு வீடு எடுத்துக் கொடுக்க தூண்டினான் தாவீந்தர். அப்சல் வீடு எடுத்துக் கொடுத்தவந்தான் நாடாளுமன்ற தாக்குதலோடு தொடர்புடையவன் என நினைக்கிறேன்.அந்த தாக்குதலே காவல்துறை அதிகாரியான தாவீந்தரின் உதவியுடன் தான் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் இப்போது எழுகிறது,. அது மட்டுமல்ல சமீபத்தில் இந்திய ராணுவத்தினர் மீதான தாக்குதலில் இவனது துணையில்லாமல் நடந்திருக்குமா என்பதும் சந்தேகம்தான்.நாடாளுமன்ற தாக்குதலையும் நடத்தி அப்பாவி அப்சலை அதற்கு குற்றவாளியாக்கி தூக்கிலும் ஏற்றி இவன் தீவீரவாதிகளோடு தொடர்ந்து உறவில் இருந்து இப்போது சிக்கியிருக்கிறான்.தேசம் தேசியம் பாரத் மாதா கீ ஜெய் என்று வந்தால் அதில் எத்தனை எத்தனை அப்பாவிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கு அப்சல் தன் உயிரை ஈந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. தாவீந்தர் சிங் பற்றிய உண்மைகளை மக்கள் முன்னால் அரசு வைக்க வேண்டும்!LikeComment