அண்ணல் அம்பேத்கார், தந்தை பெரியார்
அண்ணல் அம்பேத்கார், தந்தை பெரியார்

அண்ணல் அம்பேத்கார், தந்தை பெரியார்

அண்ணல் அம்பேத்கார், தந்தை பெரியார் ஆகியோரின் வரலாற்றுப் பாத்திரம் என்பதை மறுக்க முடியாது. அவர்கள் முதலாளித்துவ சகாப்பத்தில் நுழைந்த போது நிறுவனமயப்பட்ட உரிமைகளை அனைவரும் கிடைக்க இடையறாது குரல் கொடுத்தார்கள். ஆனால் அவர்களை பொதுவுடைமைச் சிந்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர்களாகவோ, உற்பத்திமுறையை மாற்றியமைப்பதன் ஊடாக மாற்றம் கொள்ள முடியும் என்று நம்பியவர்கள் அல்ல.1.”நான் கம்யூனிஸ்டுகளின் பரம்பரை எதிரி”. மேலும் அவர்கள் தங்களது அரசியல் நோக்கத்திற்காக தொழிலாளர்களை சுரண்டுபவர்கள். பொதுவுடமை தத்துவம் பன்றிகளின் தத்துவம். புரட்சி வேலைக்காகது.. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை விட புத்தமே சிறந்தது.. மதம் மக்களுக்கு அபின் இல்லை.. மதம் சமுதாய புத்தெழுச்சிக்கு வழிவகுக்கும்.(அம்பேத்கர் நூல் தொகுப்பு-தொகுதி 7. பக்402-433 மற்றும் தொகுதி:37-பக்212)2.1929ல் நடைபெற்ற பம்பாய் நெசவாலை தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தையும், அதை நடத்திய கம்யூனிஸ்டுகளையும் எதிர்த்து சகட்டுமேனிக்கு அவதூறு செய்கிறார்.3. இந்தியா ஒரே நாடாகத்தான் இருக்க வேண்டும் என்றும், இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக; அதுவும் தேவநாகரி வரிவடிவில்தான் இருக்க வேண்டும் என்கிறார். மொழிவழி மாகாணங்கள் இந்தியாவை உடைத்து விடும் என்கிறார்.(1948ல் மொழிவாரி மாநில அமைப்பு குழுவில் அம்பேத்கர் அளித்த அறிக்கை)4. ரஷ்ய கம்யூனிசம் மோசடியானது.. இந்தியா ஒருபோதும் கம்யூனிச நாடாக ஆகக் கூடாது.. நாடாளுமன்ற ஜனநாயகமே உயர்வானது.. இரஷ்ய பூதம் பல நாடுகளை காவு கொள்கிறது.. கம்யூனிச நாடுகளில் ஒழுக்கநெறி என்பதே இல்லை.. ரஷ்யாவில் பொதுவுடைமை தோற்கும்.. சொத்திற்காக மக்கள் அங்கே ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு ரத்தக்களறியில் ஈடுபடுவர்.(தொகுதி 37-பக் 531-539 மற்றும் 1947 ஏப்ரல் 13 நவயுகம் அம்பேத்கர் சிறப்பு மலர் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகம் தோற்றுப்போனால் கலகம், அராஜகம், கம்யூனிசம் வரும் என்ற அம்பேத்கரின் கட்டுரை )5. லாலா லஜபதிராய் இந்திய விடுதலை இயக்கத்தில் அம்பேத்கரை பங்கெடுக்க கோரியபோது நான் நியூயார்க்கில் படிக்க மட்டும்தான் வந்துள்ளேன் என மறுக்கிறார். பின்னர் படிக்கும் காலத்தில் மாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க கூடாது என்கிறார். (1933 ஏப்ரல் 4ல் ஆகாகான் விடுதி பேச்சு). ஒத்துழையாமை இயக்கம் வன்முறையானது என எதிர்க்கிறார்.(முன்பு ஒருமுறை கீதையின் தத்துவமே சத்யாகிரககம்தான் என 1927 டிசம்பர் 25, 26ல் நடைபெறும் செளதார் குளத்தில் நீர் எடுக்கும் போராட்டத்தை முன்னிட்டு அம்பேத்கர் பேசியது குறிப்பிடத்தக்கது)6. அரசியலை விட மதத்தில்தான் நான் அதிக நாட்டம் கொண்டவன். கம்யூனிஸ்டுகள் மார்க்ஸைவிட புத்தரை அதிகம் உள்வாங்க வேண்டும்.( புத்தரா? கார்ல் மார்க்ஸா? என்ற அம்பேத்கரின் கட்டுரை)மேலதிக ஆதாரங்களுக்கு தான் வாழுங்காலத்திலே தனது வாழ்க்கை வரலாற்றை தானே மெய்ப்பு பார்த்த அவருடைய வாழ்க்கை வரலாறு. தனஞ்செய்கீர் எழுதிய நூல். தமிழில் பெரியார் அறக்கட்டளை வெளியீடு. அதன் பக்கங்கள்: (41,172,184, 203, 344, 433, 579, 603, 604, 653, 665, 666, 667, 672, 675, 677, 678, 679, 696, 741, 757)

“தலித்திய” அரசியல்பாதை சமூகத்தை மாற்றக் கோருவதில்லை. சுயகௌரவம், சலுகை, பதவி என குறிப்பிட்ட உயர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கான சலுகைகளை முழுச் சமுதாயத்தின் பெயரால் முன்வைக்கப்படுவதேயாகும். இந்த அமைப்பின் மூலம் ஒரு உயர் குழாமிற்கான பேரம் பேசும் அரசியலுக்கு போடும் அஸ்திவாரமே இதுவாகும்.தலித்தியமா? வர்க்கமா? தலித் – தலித்தியம் என்பது ஒரு அரசியல் போக்காக இந்தியாவில் உருவாகியது. இந்த உருவாக்கம் புரட்சிகர நிலைப்பாடுகளில் இருந்து தன்னியல்பான அடையாள அரசியலை சாதிகளில் உள்ள உயர் வர்க்கத்தவர்களாலும், புத்திஜீவிகளினாலும் முன்னிறுத்தப்பட்டது. தலித்தியம் என்றால் என்ன என்று அறியும் நோக்குடன் முகப்புத்தகத்தில் அரசியல் ரீதியாக செயற்பாட்டில் உள்ளவர்களுடன் கேள்வி எழுப்பியிருந்தேன். அவர்களில் பலர் தமது கருத்தை தெரிவித்திருந்தார்கள். இது பொதுவெளியில் பெற்றதினால் தனிநபர்களின் பெயர்களை இடவில்லை அக் கருத்துக்களைப் பார்ப்போம்.”சமூகத்தின் பொதுவான அளவுகோளில் இருந்து தலித்களின் பிரச்னையைப் பார்க்காமல், பிரத்யோகமாக தலித்துக்களின் கோணத்தில் இருந்து அணுகுவது. அதாவது சமூகத்தை வர்க்கமாகப் பார்ப்பதை கறாராக மறுத்து சாதியாக பார்க்கிறது தலித்தியம். தலித் மக்களின் பிரச்னைக்கான தீர்வையும், சாதி வாதத்தை பேசியே பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையை இது வழங்குகிறது.ஆதிக்க சாதியில் ஏழைகள் இருந்தபோதிலும் அவர்கள் உயர்சாதியின் பண்புகளுடனேயே இருப்பதால், வர்க்க வேறுபாடு சாதியை ஒழித்துவிடாது என்பது தலித்தியத்தின் பிரதானமான நம்பிக்கை, கோட்பாடு. இது தலித்தியம் பற்றி நான் புரிந்துகொள்வது. ஆனால் இதன் மீதான என் விமர்சனம் வேறு. அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கொண்ட சமூகத்தில், சாதி வேறுபாட்டை கலைவதே எந்த இயக்கமாக இருந்தாலும், அதன் மைய நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் தலித்தியம் என்பது சாதி வேறுபாட்டை மேலும், இறுக்கமாக் கட்டுகிறது. அதனால் மைய நோக்கத்தில் அது சிதைவுறுகிறது.மாறாக, உழைக்கும் மக்கள் என்ற பொதுவான தளத்தில் ஒன்று சேரும்போதுதான் அது அனைத்து ஒடுக்கப்படும் மக்களையும் ஒன்றிணைக்க முடியும். ஆதிக்க சாதியாக இருந்தாலும், அதில் உள்ள பணக்காரன், தன் சொந்த சாதியை சேர்ந்த ஏழை மக்களை கசக்கி பிழியவே செய்கிறான்.”

தலித்தியவாதிகள், சாதியக் கட்சிகள் அந்த மக்களை தேர்தலின் போது சாதிய அடையாளத்தை புதுப்பித்தே வந்துள்ளனர். இவர்கள் அடையாள அரசியல் ஊடாக ஜனநாயக உரிமையை ஒப்பிட்ட ரீதியாக பெற்றுக் கொண்டாலும் சாதிய அடையாளம் என்பதை மறையவில்லை. கடந்து வந்த பொருளாதார அமைப்பின் ஊடாகப் பெற்ற போலிச் சிந்தனை என்பது சமூகத்தில் சாதிய, மதச் சிந்தனை ஊடாக தொடர்ச்சியாக உயிர்வாழ்கின்றது. சாதிய அடையாளம் என்பது அதிகாரத்திற்கானதாக பயன்படுத்தப்படுகின்றது. ஒடுக்கப்பட்டவர்கள் பற்றி ஒடுக்கப்பட்ட சாதிகளாக இருந்து பேசினால் தான் ஒடுக்குமுறையின் தாற்பரியம் புரியும் என்ற காரணத்தினால் என்னவோ தலித்தியத்தைப் பற்றிப் பேசுவதற்கும், தலித்திய இலக்கியங்களை படைப்பதற்கும் தலித்துக்களினால் மாத்திரம் தான் முடியும் என்று சட்டவரையறை வகுத்துள்ளார்கள். உழைக்கும் மக்களின் வர்க்கமானது அனைத்துச் சாதிகளிலும், இனங்களிலும், தேசங்களிலும் உள்ளார்கள். இந்தப் பொருளாதார அமைப்பில் இலக்கியம் படைக்க முடியாதுள்ள எத்தனையோ திறமைசாலிகளை இந்தச் சமூகம் இழந்துள்ளது. உழைக்கும் வர்க்கத்தில் உள்ளவர்களின் உற்பத்திச் சக்தியை வளர்த்தெடுப்பதற்கும், சந்தர்ப்பம் கொடுப்பதற்கும் இசைவான சமூகப் பொருளாதார அமைப்பை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை. சாதியை புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல்கள் சமூகத்தளத்தில் எதிர்ரொலித்துக் கொண்டிருக்கின்றது. சாதியத்திற்கு எதிராக போராடுவதற்கான கோட்பாடு என்பது மார்க்சியர்களைப் பொறுத்தவரை எதிர்ப்புரட்சிகரக் கூறுகளை சமாளிக்க வேண்டியிருக்கின்றது. மார்க்சியம் சாதியைப் பற்றிய புரிதலை நிறைவாகவே முன்வைத்திருக்கின்றது. மார்க்சின் கோட்பாடுகளை புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கின்ற அறிவாளிகள் தம் இருப்பிற்காக பற்பல கோட்பாடுகளையும், விளக்கங்களையும் கொடுத்து வந்திருக்கின்றார்கள். இதில் தலித்திய அறிவாளிகள் சாதியமானது பொருளாதார அமைப்பின் உற்பத்தியே என்பதை ஏற்க மறுக்கின்றார்கள்.

ஆதிப் பொதுவுடமைச் சமூகத்தில் இனக்குழும சமூகத்தில் சாதியம் இருந்திருக்க முடியாது. சாதியம் கூட நிலப்பிரபுத்துவ பொருளாதார அமைப்பில் உருவாகியது. பொருளாதார அமைப்பில் உருவானதுதான் சாதியம் மதச் சித்தாந்தங்கள். அவை ஒன்று திடீரென முளைக்க முடியாது. நாம் சாதியைப் பற்றி பேசுகின்ற போது பல வரலாற்றுத் தடயங்களை தொட்டுச் செல்ல வேண்டும். சாதியம் என்பது நிலப்பிரபுத்துவத்தின் வளர்ச்சிக் கட்டத்தின் ஊடனே ஆழப்படுத்தப்படுகின்றது. சாதியம் என்பது ஒரு மதப்பிரிவினரான வைணவ- மனுநீதியைப் போற்றும் சிந்தனையின் ஆழப்படுத்தல் என்பது பொருளாதார வளர்ச்சின் ஊடாகவும், பண்டங்கள் பரிவர்த்தணை உருவாக்கப்படுகின்றது. பண்டங்களின் பரிவர்த்தனை ஊடாக பொருளிற்கான விலை நிர்ணயம் கொடுக்கப்படுகின்றது. பண்டமாற்றத்தின் ஊடாகப் பெறும் பணத்தின் ஒரு பகுதி உபரியை ஏற்படுத்துக் கொள்கின்றது. பண்டமாற்றில் இருந்து பெறப்படும் ஒரு பகுதியை கூலியாகக் கொடுக்கப்படுகின்றது. இவ்வாறான மேலதிக வருவாய் சொத்துக்களை உருவாக்கிக் கொள்கின்றது. சாதியம் நிறுவனமயப்படுவதற்கு பொருளாதார வளர்ச்சி முக்கியமானதாகும். சொத்துடமை வர்க்கத்தின் தயவில் உழைக்காது வாழும் சோம்பேறிகளும் உருவாக்கப்படுகின்றார்கள். இந்தச் மூளைஉழைப்பை வழங்கும் கூட்டத்திற்கு வெகுமானம் கொடுத்து அரச சபையிலும் கோவில்களில் நிறுத்தப்படுகின்றார்கள். நிலப்பிரபுத்துவத்திற்குரிய மதியுரைஞ்ஞர்களாக உருவாகும் காலம். இந்த மதியுரைஞ்ஞர்களால் அரசின் உதவியுடன் உருவாக்கப்பட்டது தான் (சாதியச்) அந்தப் பொருளாதாரத்திற்குரிய சிந்தனையோட்டம். “பொருளாதாரச் சமத்துவத்தால் சமுதாயப் பேதாபேதங்கள் அகன்றுவிடும் என்பது மேல் நாடுகளுக்குச் சற்றுப் பொருத்தமானதாயிருக்கலாம். மேல்நாட்டு மக்கள் எல்லோருமே ஒரே மதத்தைத் தழுவியவர்கள் ஆவார்கள். எனவே இயல்பிலேயே அங்குச் சமுதாயத்தில் பேதா பேதம் இல்லாமலிருந்து வருகிறது. நம் நாட்டு நிலை அப்படி இல்லை. (இங்குப் பிறவியிலேயே பேதாபேதம் கற்பிக்கப்பட்டு மக்கள் பல சாதிகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்).” (38.3.13) (பெரியார்) முதலாளித்துவம் அது வகித்த முற்போக்குப் பாத்திரத்தை இழந்து விட்டது என்பதை பெரியார் காலத்திலேயே இழந்துவிட்டிருந்தது. ஏகாதிபத்திய காலத்தில் உலகைப் பங்கிட தொடங்கிவிட்டிருந்தது. இதே வேளை ஐரோப்பாவில் உள்ள சமத்துவம் என்ன எவ்வாறு இருந்தது என்பது பற்றிய கேள்விக் குறியாகும். ஏனெனில் மேற்கத்தைய சமூகத்தில் ஏற்றத் தாழ்வு கொண்டதாக இருந்து வந்துள்ளது. மேற்கு மீதான மயக்கம் இருந்த காரணத்தினால் மேற்கத்தை கலாச்சாரத்தினை, மொழியை இந்தியர்கள் பின்பற்றுமாறு கேட்டிருந்தார். இங்கு தந்தை பெரியார் சுயேட்சையான, சுதேசக் கலாச்சாரத்தினை உருவாக்கிக் கொள்ள அவரால் முடியவில்லை. இங்கு தந்தை பெரியார் நிலமானியத்தின் பிற்போக்குச் கலாச்சாரத்தினை விட முதலாளித்துவ ஜனநாயகம் என்பது முன்னேறிய ஜனநாயகத்தை பின்பற்றுமாறு கோரியது அந்தக் காலகட்டத்தில் சரியான நிலைப்பாடானதே.இங்கு ஒடுக்கும் சிந்தனை என்பது ஒரு சாதிக்குரியாக வரையறுக்க முடியாது. இந்தப் பார்வை சமூக மாற்றத்திற்கான போராட்டத்தின் போது எதிர்நிலைக் கருத்துக்கள் முன்வைக்கின்றனர். தலித்தியவாதிகள் “முதலாளித்துவத்தையும், நிலப்பிரபுத்துவத்தையும், ஏகாதிபத்தியத்தையும் எதிர்ப்பதைவிட சாதியத்தை எதிர்ப்பதுதான் இங்கே முக்கியம். ஏனெனில் இங்கே சாதியத்துடன் தான் எல்லாமே பின்னிப்பிணைந்திருக்கின்றன. பெண்விடுதலைக்கு வர்க்க விடுதலையே வழிவகுக்கும் என்பது புகட்டப்பட்டுள்ள பாடம்.” எனக்கருதும் போக்கு அறிவுசார் பிரிவினரிடம் இருக்கின்றது.இவர்கள் தமது ஆழுமையைப் பயன்படுத்தி ஒரு அரசியல் போக்கை நிர்ணயிக்க கோருகின்றார்கள். இவ்வாறானவர்களின் சிந்தனையை எங்கெல்ஸ் பின்வருமாறு கூறுகின்றார். “முதிர்ச்சியற்ற முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிலைமைகளுக்கும் முதிர்ச்சியற்ற வர்க்க நிலைமைகளுக்கும் இணைவாய் முதிர்ச்சியற்ற கோட்பாடுகளை அவர்கள் முன்வைத்தனர் என்றார். சமூகப் பிரச்சினைகளுக்குரிய தீர்வு வளர்ச்சியுறாத பொருளாதார நிலைமைகளில் புதையுண்டு இன்னும் மறைந்தே கிடந்தது. இந்தத் தீர்வினைக் கற்பனாவாதிகள் மனித மூளையிலிருந்து உருவாக்க முயன்றார்கள்.”ON THIS DAY

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *