அடிமைச் சமுதாய வீழ்ச்சியும் நிலபிரபுத்துவத்தின் பிறப்பும்.ஒரு சுருக்கமான பதிவுஇத்தாலி அடிமைச் சகாப்தத்தின் மையமாக விளங்கிற்று. கணக் கற்ற அடிமைகளை வைத்திருந்த ரோம எஜமானர்கள் பெருமளவில் விவசாயம் செய்து கொள்ளை லாபம் சம்பாதித்தனர். அன்று அடிமைகளின் முதுகெலும்பின்மீது செல்வம் எனும் மாளிகை கட்டப்பட்டது. உண்மையில் அடிமைகளின் இரத்தத்தை உறிஞ்சிக் கொழுத்தனர் ரோம எஜமானர்கள்.உரிமைகளும் உற்பத்திக் கருவிகளும் இல்லாத அடிமைகள் அவமதிக்கப்பட்டனர். செக்குமாடுபோல் உழைக்கும்படி நிர்ப்பந்திக் கப்பட்டனர். துன்பம் நிறைந்த வாழ்க்கை அவர்களின் ஜீவசக்தியை உறிஞ்சியது. வாழ்க்கை எனும் சுமையை சுமக்க முடியாமல் அவர்கள் துன்பக் கண்ணீர் வடித்தனர். கேவலமான வாழ்க்கையிலிருந்து விடுபடுவதற்காக அவர்கள் தப்பி ஓட முயன்றனர். எனவே இரவில் அவர்களுக்கு எஜமானர்கள் விலங்கிட்டினர். குடும்ப வாழ்க்கை அவர்களுக்கு மறுக்கப்பட்டது. அடிமைகள் கல்யாணம் செய்யக்கூடாது எனும் நியதி அமுலில் இருந்தது. கல்வி கற்கவும் அடிமைகள் அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில் அறிவு அடிமைகளின் அறிவுக் கண்களைத் திறக்கும் என்பது எஜமானர்களுக்குத் தெரியும். அடிமைகள் மீது எஜமானர்கள் ஏகபோக உரிமை கொண்டாடினர். அடிமைகளை அவர்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம். அடிமைகளை அவர்கள் சித்திரவதை செய்யலாம்; உருக்குலைக்கலாம்; கொலை செய்யலாம். பல நாட்கள் பட்டினிபோடப்பட்ட சிங்கத்துடன் எந்த விதமான ஆயுதமுமின்றி போர் புரியும்படி அடிமைகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். அந்தக்காலத்தில் இதுபெரிய வேடிக்கையாக மதிக்கப்பட்டது, எனஜமானர்களின் இன்பத்துக்காக, அவர்களின் நன்மைக்காக அடிமைகள் தங்குதடையின்றிப் பலியிடப்பட்டனர். எஜமானர்கள் கிழிக்கும் கோட்டைக் கடந்து செல்லத் துணியும் அடிமையின் கதி அதோ கதிதான். அவன் எஜமானுக்கு ஏதும் தீங்கு செய்தால் அவன் மாத்திர மல்ல, அவனைச் சேர்ந்தவர்கள் கூட நிர்மூலம் செய்யப்படுவார்கள். அடிமைச் சகாப்தத்தில் இந்த நிலைமை எங்கும் குடிகொண்டிருந்தது.முதுகெலும்பு முறிய வெயிலிலும் மழையிலும் வேலைசெய்த அடிமைகளுக்குக் கிடைத்த ஊதியம் சவுக்கடி. கடுமையான உழைப்பால் தளர்ந்த அடிமைகள் உழைக்கும் சக்தியை இழந்தனர். வேலை செய்யும்படி அவர்களைத் தூண்டுவதற்காக கங்காணிகள் இடைவிடாது அடித்தனர். இவ்வாருன துன்பத்தைச் சகிக்க முடியாமல் அடிமைகள் ஈசலப்போல மடிந்தனர். காலப்போக்கில் அடிமைகளின் எண்ணிக்கைபடிப்படியாகக் குறைந்தது. யுத்தக்கைதிகளை அடிமைகளாக மாற்றும் முறையும் அன்று அமுலில் இருக்கவில்லை, சகிக்க முடியாத வறுமையும், பொருளாதார பேதமும் அடிமை முறைக்கு உலை வைத்தன. துன்பத்தால் விறைத்த அடிமைகளின் இதயத்தில் துணிச்சல் பிறந்தது, அவர்கள் கொடுமையை எதிர்த்துப் போராடத் தொடங்கினர்.அடிமைமுறை, வளர்ந்து வரும் விவசாய முறைக்குக் குறுக்கே நின்றது. உற்சாகமின்றி அடிமைகள் உழைத்ததால் விவசாயம் தடைப்பட்டது. எஜமானர்களின் வருவாய் குறைந்தது. அடிமைகளைக் கொண்டு விவசாயம் செய்வது இலாபத்தைத்தராது என்று அவர்கள் உணர்ந்தனர். அடிமை உழைப்பால் சமூகத்தின் உழைப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால் உற்பத்தியும் தேவையும் முட்டி மோதின. பழைய முறைக்கு விடை கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. நிலத்தை வைத்திருந்த எஜமானர்கள் தமது நிலங்களைத் துண்டுபடுத்தி, அந்தத் துண்டு நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைத்தனர். இதன்மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு அவர்கள் திருப்தியடைந்தனர்.வர்த்தகம் ஆரம்பமானதைத் தொடர்ந்து கடற்கரை ஓரங்களில் நகரங்கள் தோன்றின. நகரத்தில் வாழ்ந்த வர்த்தகர்கள் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தினர். வர்த்தகம் தலை தூக்கியதும் பொருட்களின் தேவை அதிகரித்தது. தலை தெறிக்கும் வேகத்தில் வர்த்தகம் வளர்ச்சி யடைந்தது. ஆயினும் ஒர் எல்லைக்கு உட்பட்ட அடிமைகளின் உழைப்பு உற்பத்தி செய்த பண்டங்கள் வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை. எனவே வர்த்தகம் தேங்கி நின்றது. அதே சமயத்தில் வர்த்தகர்களிடமும், வட்டித் தொழில் செய்வோரிடமும் செல்வம் மலை போல் குவிந்துகிடந்தது. வர்த்தகம் தேங்கி நின்றதைத் தொடர்ந்து நகரவாசிகள் வேலையில்லாத் திண்டாட்டத்தால் வாடினர். வேலையில்லாத் திண்டாட்டமும் வறுமையும் மக்களைச் சித்திரவதை செய்தன. வளர்ந்துவரும் சமூகத் தேவையும் பழைய உற்பத்திமுறையும் முட்டிமோதின. பழைய சமூகமுறை சாகவேண்டும் என்று சரித்திரம் தீர்ப்புச் சொல்லியது. அது செத்தது.ஐந்தாம் நூற்ருண்டில் அடிமை சகாப்தம் மரணநிலையை அடைந்தது. அடிமைமுறையை அடித்தளமாகக் கொண்டிருந்த ரோமசாம்ராஜ்யம் தளர்ந்தது. இதனைத்தொடர்ந்து அதன் அரசியல் அமைப்பும் நிலை குலைந்தது. இராணுவ ஆட்சி எங்கும் தலைதூக்கியது. அந்தக்காலத்தில் அடிமை முறையை எதிர்த்து அடிமைகளும் வளர்ந்துவரும் வர்த்தகர்களோடு போர்புரிந்தனர். அத்துடன் ஜெர்மனியர் ரோமசாம்ராஜ்யத்தின் மீது படை எடுத்தனர், முன்னரே தளர்ந்திருந்த ரோம சாம்ராஜ்யம் இடிந்துநொருங்கியது. அத்துடன் அடிமைசகாப்தமும் செத்தது. மனித சமூகம் நிலப்பிரபுத்துவ சகாப்தத்தைக் கொட்டுமேளத்துடன் வரவேற்றது. எதுவும் நிலையானது இல்லை வளர்ச்சி போக்கின் ஊடே மாற்றம் கொண்டதே…LikeCommentShare