அகிலமும் மற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளும்
அகிலமும் மற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளும்

அகிலமும் மற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளும்

கம்யூனிஸ்ட் அகிலத்தின் சேர விரும்பும் எந்த ஒரு கட்சியும் எந்த ஒரு சுவை வித் குடியரசுக்கும் அதற்கு எதிராக எழும்பும் எதிர்ப்புரட்சி சக்திகளை எதிர்த்து போரிட தன்னலமின்றி உதவிட வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சோவியத் குடியரசுகள் அது விரோதிகளுக்கு அனுப்பப்படும் யுத்த தளவாடங்களை ஏற்றிச்செல்ல தொழிலாளர்கள் மதித்திட வேண்டும் என்று அவர்கள் மத்தியில் வலுவான பிரசாரம் நடத்திட வேண்டும் அவர்கள் சட்டரீதியான 1848 ஆம் ஆண்டு மார்க்ஸ் எங்கெல்ஸ் அவர்களால் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடப்பட்டது. உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்று போர்க்குணமிக்க முழக்கம் பிரகடனப்படுத்தப்பட்டது. விஞ்ஞான ரீதியான கம்யூனிசத்துக்கு முறையான ஆழமான விளக்கத்தை அளித்து அதன் மூலம் சர்வதேச பாட்டாளி வர்க்கம் ஒற்றுமைக்கான இந்த அடிப்படைகளை மார்க்ஸ் எங்கெல்ஸ் நிறுவினர். இன்றளவும் அது சர்வதேச தொழிலாளர் ஒற்றுமைகான பொதுவாக அனைவராலும் ஏற்கப்பட்டுள்ளது.
வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் பாட்டாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தை தூக்கி எறிந்து அதிகாரத்தைக் கைப்பற்றி சோசலிச உற்பத்தி முறையை கட்டி அமைக்கும் பணிக்கு வழிநடத்த முதல் அகிலமும் இரண்டாம் அகிலம் உருவாக்கப்பட்டது பிரான்ஸ் நாட்டு தொழிலாளர்களின் உழைப்பின் மூலம் பாரிஸ் கம்யூன் தோற்றுவிக்கப்பட்டது சில மாதங்கள் வரை நீடித்த பாரிஸ் கம்யூன் பல நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்தின் ஒன்றுபட்ட சக்தியால் அது வீழ்த்தப்பட்டது ஆனாலும் அது வரலாற்றில் முதலாளி வர்க்கத்தை வீழ்த்துவதற்கான ஒத்திகையாக இருந்துள்ளது. சோசலிச புரட்சி முதலாளி நாடுகளில் முதலில் நடைபெறும் நிகழ்வாக அப்போது பார்க்கப்பட்டது.
முதலாளித்துவம் ஏகபோக முதலாளித்துவமாக ஏகாதிபத்தியமாக மாறி உலக சந்தையை மறு பங்கீடு செய்து கொள்ளையடிப்பதற்காக ஏகாதிபத்திய போரை முதல் உலகப் போரை நடத்தின அச்சமயம் சர்வதேச கம்யூனிச இயக்கம் ஏகாதிபத்திய போரை உள்நாட்டு யுத்தமாக மாற்றி முதலாளி வர்க்கத்தை தூக்கி எறிய வேண்டும் என்று வழிகாட்டலை அளித்தது இதற்கு ஏற்ப லெனின் தலைமையில் ரஷ்யாவின் போல்ஷ்விக் கட்சி முதலாளி வர்க்கத்தை தூக்கி எறிந்து சோசலிசப் புரட்சியை நடத்தி வெற்றி அடைந்தது இது ஒரு உலக வரலாற்றில் மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது .
உலகில் ஏகாதிபத்திய முதலாளித்துவ பிற்போக்கு சக்திகளை எதிர்த்துப் போராடும் சக்திகளுக்கு உத்வேகம் அளித்தது காலனிய எதிர்ப்பு தேசிய விடுதலைப் போரிலும் சோசலிசக் கட்சிகளும் இணைந்து உலகப் புரட்சி என்ற முழுமையான அம்சங்களை என உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று கூடுங்கள் என்ற புதிய முழக்கம் முன்னுக்கு வந்தது இரண்டாம் அகிலம் சந்தர்ப்ப வாத நோயால் பீடிக்கப்பட்டு முதலாளிகளுக்கு ஆதரவாக மாறியதால் உலகத்துக்கு வழிகாட்ட தகுதியற்றதாக மாறியது ரஷ்யப் புரட்சிக்குப் பின் லெனின் தலைமையில் மூன்றாம் அகிலம் உருவாக்கப்பட்டது.
மூன்றாம் அகிலம் ஆனது சோசலிச நாடுகள் முதலாளிய நாடுகள் மற்றும் குடியேற்ற நாடுகளின் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் அமைப்புகளை உள்ளடக்கியதாக இருந்தது.
வரலாற்றில் மூன்றாவது அகிலத்தின் இடத்தை லெனின் பின்வருமாறு வரையறுத்தார்,” முதலாவது அகிலம் சோஷலிசத்திற்கான பாட்டாளி வர்க்க சர்வதேச போராட்டத்திற்கு அடிக்கல் நாட்டியது, இரண்டாம் அகிலம் அனேக நாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை விரிவான விஸ்தரிப்பு க்கு முன்னேற்பாடுகள் நடத்தியது மூன்றாம் அகிலம் இரண்டாம் செய்த வேலைகளில் பயன்களை ஏற்றுக்கொண்டு அதன் சந்தர்ப்பவாத சமூக தேசிய முதலாளித்துவ குட்டி முதலாளித்துவ ஆறுகளை துணிந்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை செயல்படுத்த தொடங்கியது “.
22/02/2022
மூன்றாவது அகிலம் எல்லா நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அமைப்பதற்கு வழிகாட்டியது அகிலத்தின் இரண்டாம் மாநாட்டில் லெனின் வரையறுத்த” ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி” பாதை குடியேற்ற நாடுகளுக்கான அரசியல் திசை வழியாக அமைந்தது. குடியேற்ற நாட்டில் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்துதல் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் இணைவதன் மூலம் குடியேற்ற நாடுகளும் உலக புரட்சிக்கு பங்காற்ற இயலும் , குடியேற்ற நாடுகளில் நடைபெறும் போராட்டம் சோசலிச போராட்டமாக இருக்காமல் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை கொண்ட ஜனநாயக போராட்டமாக இருக்கும்.
23/02/22
மூன்றாம் அகிலம் முன்வைத்த கோட்பாடுகள்
+++++++++++++++++++++++++++++
இன்று இந்தியாவில் சிபிஐ சிபிஎம் கட்சிகள் கம்யூனிசத்தின் பெயரால் முதலாளித்துவ கும்பலின் ஒரு பிரிவினராக ஆட்சியதிகாரத்தில் தங்களின் பங்கில் வாழ்ந்து கொண்டுள்ளனர் புரட்சி பேசும் புரட்சியாளர்களும் அதிகார வர்க்கத்துக்கு எதிரான மூலதனத்திற்கு எதிராக நிலவுடமை கும்பலுக்கு எதிராக சரியான பெரும் முதலாளிகளை சரியான வர்க்கப் போராட்டத்தை ஒழுங்கு அமைப்பதில் திறமையற்றவர்களாக இருக்கின்றன கம்யூனிசத்திற்கு ஆளுக்கு ஒரு வகையாக விளக்கம் கொடுத்து மக்களை குழப்புகின்ற மக்கள் கம்யூனிசத்திற்கு பக்கம் வரத் தயங்குகின்றனர்.
இதனை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இரண்டாம் அகிலத்தில் காவுத்ஸகி போன்ற துரோகிகள் செய்த அந்தப் பெரும் துரோகத்தை இரண்டாம் அகிலத்தில் தவறுகளை களைந்து மூன்றாம் அகிலத்தை லெனின் எப்படி கட்டியமைத்தார் என்பதை இப்போது புரிந்து கொள்வோம் .
1).அன்றாட பிரசாரம் மற்றும் ஆர்ப்பாட்டம் எல்லாம் உள்ளபடியே கம்யூனிச தன்மை கொண்டதாக விளங்க வேண்டும் .கட்சிகளுக்கு சொந்தமான அனைத்து ஏடுகளும் பாட்டாளி வர்க்க புரட்சி லட்சியத்தில் தங்களது ஈடுபாட்டை நிரூபித்துக் கொண்டுள்ள நம்பிக்கை உள்ள கம்யூனிஸ்டுகளால் வெளியிடவேண்டும் . பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது மனப்பாடம் செய்யப்பட்ட கிளிப்பிள்ளை பாடமாக விவாதிக்கப்படக்கூடாது நம்முடைய பத்திரிகைகளில் நாள்தோறும் திட்டவட்டமாக வெளியிடப்படும் நடைமுறை உண்மைகளின் மூலம் அணிகளில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு படைவீரன் மற்றும் ஒவ்வொரு உழவனும் அது இன்றியமையாத ஒன்று என்பதை உணர்ந்து கொள்ளும் வகையில் அதை பிரபலமாக்கி விட வேண்டும் மூன்றாவது அகிலத்தின் ஆதரவாளர்கள் தங்களுக்கு சாத்தியமான அனைத்து செய்தி சாதனங்கள் மூலமாக பத்திரிக்கைகள் பொதுக்கூட்டங்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் முதலாளி வர்க்கம் மட்டுமல்லாமல் அதன் சீர்திருத்தவாதி களையும் அம்பலப்படுத்த வேண்டும். கம்யூனிஸ்டுகளை உறுதிப்படுத்த வேண்டும்.
24/02/22
2).உழைக்கும் வர்க்க இயக்கத்தில் எவ்விதப் பொறுப்பும் உடைய பதவிகளிலிருந்து. இடையறாது, திட்டவட்டமாக சீர்திருத்தவாதிகளையும் மைய்யவாதிகளையும் பதவி நீக்கம் செய்வது , கம்யூனிஸ்ட் அகிலத்தில் சேர விரும்பும் எந்த ஒரு அமைக்கும் அவசியமானதாகும்.(கட்சி அமைப்புகள் ஆசிரியர் குழுக்கள் தொழிற்சங்கங்கள் பாராளுமன்றத் தொகுதிகள் இத்தியாதி) .இவர்களை பதவி நீக்கம் செய்துவிட்டு அவ்விடங்களில் பொறுப்பான சில சமயங்களில் அனுபவம் வாய்ந்த தலைவர்களை நீக்கிவிட்டு சாதாரண அணியில் உள்ள தொழிலாளர்களை முதலில் நியமித்திட வேண்டி உண்மைகள் தடைகளாக இருக்க வேண்டியதில்லை .
3).முற்றுகைக்கு உள்ளாகி இருக்கும் நாடுகளிலும் கம்யூனிஸ்டுகள் தங்களது நடவடிக்கைகளை அவசரகால நிலை சட்டம் இருக்கும் நாடுகளிலும் சட்ட ரீதியாக செய்ய முடியாது போனால், சட்டவிரோத நடவடிக்கைகள், சட்டரீதியான நடவடிக்கைகள் உடன் இணைந்து விடுவது மிக அவசர அவசியமாகும். ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவில் உள்ள நாடுகள் அனைத்திலும் வர்க்கப் போராட்டம் உள்நாட்டுப் போராக மாறிவிடும் தருவாயில் உள்ளது. இந்த சூழலில் கம்யூனிஸ்ட்கள் முதலாளிய சட்ட தன்மையில் நம்பிக்கை வைக்க முடியாது. எங்கணும் இணையான சட்டவிரோத அமைப்புகளை அவர்கள் கட்ட வேண்டும் . இவை அறுதியானதொரு நேரத்தில் புரட்சி இடத்துக்கு கட்சிக்குள்ள கடமையை ஆற்றிட உதவி செய்ய வழிவகுக்கும்.
4).இராணுவ போர் வீரர்கள் மத்தியில் இடைவிடாத திட்டவட்டமான பிரசாரமும் ஆர்ப்பாட்டமும் நடத்த வேண்டும். ஒவ்வொரு படைப்பிரிவிலும் கம்யூனிஸ்ட் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். பெரும்பாலும் இந்த பணியை கம்யூனிஸ்டுகள் சட்டவிரோதமாக தான் செய்ய வேண்டியிருக்கும். இவ்வாறு செய்யத் தவறி விடுவது தங்களது புரட்சிகர கடமையை காட்டிக் கொடுப்பதற்கு சமம் ஆகும் .மேலும் அது மூன்றாவது அகில உறுப்பினராக இருப்பதற்கு தகுதியற்றதாக ஆகிவிடும் .
5).கிராமப்புறங்களில் தொடர்ச்சியான திட்டவட்ட ஆர்ப்பாட்டம் அத்தியாவசியமானது பண்ணை தொழிலாளிகளிலும் ஏழை உழவர்களிலும் ஒரு முக்கியமான பிரிவிடம் இருந்து ஆதரவு இல்லாமல் உழைக்கும் வர்க்கம் தனது வெற்றியை ஒருங்கிணைத்திட முடியாது. மேலும் அவர்களது கொள்கையின் மூலம் எஞ்சியுள்ள கிராமத்தில் கம்யூனிச நடவடிக்கை பிரதான முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.கிராமப்புறங்களில் தொடர்புடைய புரட்சிகர கம்யூனிஸ்ட் தொழிலாளர்கள் மூலமாக இது பிரதானமாக நடத்தப்படவேண்டும். இந்த பணியை தள்ளி வைப்பதோ நம்பற்கரிய அரைகுறை சீர்திருத்தவாதிகளிடம் அதை ஒப்படைப்பதோ பாட்டாளி புரட்சியை மறுப்பதற்கு சமமாகும்.
6).சமூக நாட்டுப்பற்று வாதத்தை மட்டுமல்லாமல் சமூக போரொழிப்பு வாதத்தின் மாய்மாலம் மற்றும் பொய்மையும் அம்பலப்படுத்துவது மூன்றாவது அகலத்தில் சேர விரும்பும் எந்த ஒரு கட்சியும் கடமையாகும். முதலாளித்துவத்தை புரட்சிகரமாக தூக்கி எறிந்து விடாமல் சர்வதேச நீதி மன்றங்கள் சர்வதேச சங்கத்தை ஜனநாயக முறையில் புனரமைப்புபப் போர்களில் இருந்து மனித இனத்தை காப்பாற்றது என்ற உண்மையை தொழிலாளர்களுக்கு விளக்கி காட்டிட வேண்டும்.
7).கம்யூனிஸ்ட் அகிலத்தின் சேர விரும்பும் கட்சிகள் சீர்த்திருத்த வாதம் மற்றும் மையக் கொள்கைகளை முழுவதும் விட்டு விலகிட வேண்டும் அவசியத்தை உணர்ந்து கொள்வது கடமையாகும் அந்த விலக்கிற்காக கட்சி உறுப்பினர்களிடையே பிரசாரம் செய்திட வேண்டும் என்பது கடமையாகும். இது செய்யாமல் தொடர்ச்சியான ஒரு கம்யூனிஸ்ட் கொள்கை சாத்தியப்படாது .
கம்யூனிஸ்ட் அகிலம் இந்த விளக்கத்தை மிக விரைவில் செய்திட வேண்டும் என அறுதியாகவும் சமரசம் ஏதுமின்றியும் கோருகிறது . பகிரங்கமாக சீர்திருத்தவாதிகள் ஆக கருதப்படும் தலைவர்கள் இன்னும் இவர் போன்றவர்கள் தங்களை மூன்றாவது அகிலத்தின் உறுப்பினர்களாக கருதிக் கொள்ள அனுமதித்திடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. இப்படிப்பட்ட ஒரு நிலைமை இருக்குமானால் அது மூன்றாவது அகிலத்தை செல்லரித்துப் போன இரண்டாம் அகிலம் போன்று காட்சி அளித்திட செய்யும்.
8).காலனிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட தேசங்கள் சம்பந்தப்பட்ட மட்டில் உயர்ந்தபட்ச தெளிவு உடைய மற்றும் திட்டவட்டமான ஒரு கொள்கையை பின்பற்ற வேண்டும். மூன்றாம் அகிலத்தில் சேர விரும்பும் கட்சி தனது சொந்த நாட்டின் ஏகாதிபத்தியவாதிகளின் காலனிய தந்திரங்களை ஈவு இரக்கம் ஏதுமின்றி அம்பலப்படுத்துகிறவர்களாக இருக்க வேண்டும் . வெறும் வார்த்தையளவில் இல்லாமல் செயலிலும் ஒவ்வொரு காலனிய விடுதலை இயக்கத்தையும் ஆதரிப்பதாக இருக்க வேண்டும். தங்களது நாடுகளின் ஏகாதிபத்தியவாதிகளை காலனிகளில் இருந்து வெளியேறுவதை கோரிட வேண்டும் . காலனிகளிலும் மற்றும் ஒடுக்கப்பட்ட தேசங்களிலும் உள்ள உழைக்கும் மக்களோடு உண்மையானது ஒரு சகோதரத்துவ மனப்போக்கை தனது நாட்டில் உள்ள தொழிலாளர்களின் இதயத்தில் வளர்த்திட வேண்டும். காலனி மக்களுக்கு எதிரான அனைத்து ஒடுக்குமுறையையும் எதிர்த்து ராணுவ வீரர்களுக்கு மத்தியிலும் திட்டவட்டமான ஆர்ப்பாட்டங்களை நடத்திட வேண்டும்.
9).கம்யூனிஸ்ட் ஆங்கிலத்தில் சேர விரும்பும் எந்த ஒரு கட்சியும் தொழிற்சங்கங்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ஏனைய வெகுஜன தொழிலாளர் அமைப்புகளில் திட்டவட்டமான உணர்ச்சி குன்றாததுமான கம்யூனிஸ்ட் பணிபுரிந்துடுவது கடமையாகும். தொழிற்சங்கங்களில் கம்யூனிச குழுக்களை உருவாக்க வேண்டும் மேலும் இவர்களின் தொடர்ச்சியானது உணர்ச்சி குன்றாததுமான பணியின் மூலமாக கம்யூனிசத்திற்கு தொழிற்சங்கங்களை கவர்ந்து இழுத்து விட முடியும் . இவை தங்களது அன்றாட நடவடிக்கையில் ஒவ்வொரு பிரிவிலும் சமூக நாட்டுப்பற்று வெறியர்களது துரோகத்தையும் மய்யவாதிகளின் ஊசலாட்டத்தை அம்பலப்படுத்த வேண்டும் .இக்குழுக்கள் கட்சி முழுவதுன் கீழ் பூரண கீழ்ப்படிந்து உள்ளவர்களாக திகழ வேண்டும்.
25/02/2022
10).கம்யூனிஸ்ட் அகிலத்தை சேர்ந்த எந்த ஒரு கட்சியும் மஞ்சள் தொழிற் சாலைகளைக் கொண்ட ஆம்ஸ்டர்டாம் அகிலத்திற்கு எதிராக உறுதியான ஒரு போராட்டத்தை நடத்துவது கடமையாகும். மஞ்சள் ஆம்ஸ்டர்டாம் அகிலத்தை விட்டு விலகுவது மிகவும் அத்தியாவசியம் என்பதை அமைப்புக் உட்பட்ட தொழிலாளர்களுக்கு இதன் சோர்வு இல்லாத பிரசாரம் காட்டிட வேண்டும். வளர்ச்சி பெற்றுவரும் சிவப்பு தொழிற்சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பிற்கு இது எல்லா ஆதரவையும் நல்கிட வேண்டும் இந்த தொழிற்சங்கங்கள் எல்லாம் கம்யூனிஸ்ட் அகிலத்துடன் தொடர்பு கொண்டவையாகும்.
11).மூன்றாவது அகலத்தில் சேர விரும்பும் கட்சிகள் தங்களது பாராளுமன்ற தொகுதிகளில் உள் அமைப்பை மறுபரிசீலனை செய்து நம்ப முடியாதவர்களை நீக்கி, கட்சியின் மத்திய குழுக் இந்த தொகுதிகளை கீழ்படிந்திட வேண்டுயது கடமையாகும். ஒவ்வொரு கம்யூனிச பாட்டாளியும் தனது நடவடிக்கைகள் அனைத்தையும் உண்மையிலேயே புரட்சிகர பிரச்சாரத்துக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு கீழ்ப்படிய வேண்டும் என்று அவர்கள் கோரிட வேண்டும்.
12).வாராந்திர அல்லது மாதாந்திரப் பத்ததிரிக்கைகளும் நாளேடுகளும் மற்றும் அனைத்து வெளியீட்டு நிறுவனங்களும் இது போன்று கட்சியின் மத்திய குழுவிற்கு முழுவதற்கும் கட்டப்பட்டதாக இருக்க வேண்டும். கட்சி சட்ட விரோதமாக இயங்கிறதோ அல்லவோ இது நடைபெற்றாக வேண்டும். தங்களுக்கு அளிக்கப்படும் தன்னாட்சி உரிமையை வெளியீட்டு நிறுவனங்கள் துஷ்பிரயோகம் செய்ய அனுமதிக்கலாகாது . கொள்கைகளுக்கு முழுவதும் ஒத்துப்போகாத வழியில் நடந்து கொள்ள அனுமதிக்கக்கூடாது .
13).கம்யூனிஸ்ட் அகிலத்தோடு சார்ந்துள்ள கட்சிகள் ஜனநாயக மத்திய படுத்துதல் என்ற கொள்கையின்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். கூரான உள்நாட்டுப் போர் நடக்கும் இக்காலத்தில் கட்சிகள் மிகவும் மையப்படுத்தப்பட்ட முறையில் அமைக்கப்பட்டு இருந்தால் மட்டுமே தங்களது கடமைகளை செவ்வனே செய்திட முடியும். இவை எஃகு போன்ற கட்டுப்பாடு உடையவர்களாக திகழ வேண்டும் . கிட்டத்தட்ட இது ராணுவக் கட்டுப்பாடு போன்றுஇருக்க வேண்டும். இவைகளுக்கு வலிமை படைத்த அதிகாரம் பெற்ற கட்சி மையங்கள் இருக்க வேண்டும் . உறுப்பினர்கள் அனைவரின் ஏகோபித்த நம்பிக்கை இவர் பெற்றிருக்க வேண்டும்.
14).கம்யூனிஸ்டுகள் தங்களது பணியினை சட்டரீதியாக செய்யக்கூடிய நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் காலா காலங்களில் உறுப்பினர்களை சோதித்து நீக்கிவிடவேண்டும்.தவிர்க்க முடியாதபடி சிறு முதலாளிய கூறுகள் கட்சிக்குள் ஊடுருவி விடுவதே திட்டமாக நீக்கி விடவே இது செய்யப்படுகிறது.

15). கம்யூனிஸ்ட் அகிலத்தில் சேர விரும்பும் எந்த ஒரு கட்சியும் எந்த ஒரு சோவியத் குடியரசிற்கும் எதிராக எழும்பும் எதிர்ப்புரட்சி சக்திகளை எதிர்த்துப் போரிட தன்னலமின்றி உதவிட வேண்டும் . கம்யூனிஸ்ட் கட்சிகள் சோவியத் குடியரசுகளது விரோதிகளுக்கு அனுப்பப்படும் யுத்த தளவாடங்களை ஏற்றிச்செல்ல தொழிலாளர்கள் மறுத்திட வேண்டும் என்று அவர்கள் மத்தியில் வலுவான பிரசாரம் நடத்திட வேண்டும். அவர்கள் சட்டரீதியானதும், சட்டவிரோதமானதும் ஆன பிரசாரத்தை தொழிலாளர் குடியரசுகளை நசுக்கிட அனுப்பப்படும் ராணுவ வீரர்களுக்கு மத்தியிலும் செய்திட வேண்டும்.
16).இன்னும் சமூக ஜனநாயக நிகழ்ச்சித் திட்டத்தை வைத்துள்ள கட்சிகள் விரைவாக அவற்றைப் திருத்திக் கொள்வது கடமையாகும் . இதற்குப் பதிலாக புதிய கம்யூனிஸ வேலை திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும் . இத்திட்டங்கள் அந்தந்த நாடுகளின் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப வரையப்பட வேண்டும். மற்றும் அவை கம்யூனிஸ்ட் அகிலத்தின் முடிவுகளில் தன்மைக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் . கம்யூனிஸ்ட் அகிலத்தை சேர்ந்த எல்லா கட்சிகளும் வேலைத்திட்டங்களும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் முறையானதொரு காங்கிரசாலோ அல்லது அதன் நிர்வாகக் குழுவினரும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது விதியாகும். நிர்வாகக்குழு அங்கீகாரம் அளித்திட மறுத்திடுமானால், கட்சி கம்யூனிஸ்ட் அகிலத்தின் காங்கிரசிற்கு மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு.
17).கம்யூனிஸ்ட் அகிலத்தின் காங்கிரஸ்கள் மற்றும் அதன் உள்நாட்டுப் போர் நிலவும் சூழலில் இயங்கிடும் கம்யூனிஸ்ட் அகிலமானது இரண்டாவது அகிலத்தை விட இன்னும் அதிகமாக மையப்படுத்தப்பட்ட தாக இருக்க வேண்டும். இருந்தபோதிலும் கம்யூனிஸ்ட் அகிலம் அதன் நிர்வாகக் குழுவும் அந்தந்த கட்சிகள் இயங்கிடவும் போரிடவும் வேண்டிய வேறுபட்ட சூழ்நிலைகளில் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆகவே இப்படிப்பட்ட முடிவுகள் எங்கெல்லாம் சாத்தியமோ அப்படிப்பட்ட விஷயங்களில் மட்டுமே அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட முடிவுகள் எடுக்க வேண்டும்.
18).மேலே கூறப்பட்டதிலிருந்து கம்யூனிஸ்ட் அகிலத்தில் சேர விரும்பும் கட்சிகள் தங்களது பெயர்களை மாற்றிட வேண்டும் .இணைந்திட விரும்பும் எந்த ஒரு கட்சியும் தன்னை அந்த நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி என்று அழைத்துக் கொள்ள வேண்டும் . கட்சியின் பெயரானது வெறும் வடிவம் மட்டும் அல்லாமல் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் உடையது. கம்யூனிஸ்ட் அகிலம் முதலாளிய உலகின் மீது அனைத்து மஞ்சள் சமூக ஜனநாயகக் கட்சிகள் மீதும் உறுதியானது ஒரு போர் ஒன்றினை தொடுத்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளும் உழைக்கும் வர்க்கத்தின் பாதையைக் காட்டிக் கொடுத்துவிட்ட அதிகாரப்பூர்வ சமூக ஜனநாயக அல்லது சோசலிச கட்சிகளுக்கும் இடையே உள்ள வேற்றுமையை ஒவ்வொரு தொழிலாளியும் தெளிவாக வேண்டும்.

19). கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது உலக காங்கிரசின் முடிவுக்கு பிறகு கம்யூனிஸ்ட் அகிலத்துடன் சேர விரும்பும் எந்த ஒரு கட்சியும் வெகுவிரைவில், கட்சி முழுவதின் சார்பில் மேலே கூறப்பட்டுள்ள கடமைகளை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ள செய்ய அசாதாரண மாநாடு ஒன்றினை கூட்டிடவேண்டும் . கம்யூனிஸ்ட் அகிலத்தில் சேரும் தகுதிகள் பற்றிய வரையறை 20 ம் விளக்கி விவாதிக்க வேண்டும்.
20).மூன்றாவது அகிலத்தில் இப்போது சேர விரும்பும் கட்சிகள் தங்களது பழைய நுண்ணிய முறைகளை அடியோடு இன்னும் மாற்றிக் கொள்ளாது இருக்குமானால் , அகிலத்தில் சேருவதற்கு முன்பு மாற்றிக் கொள்ள வேண்டுவது அவசியம் . அந்தந்த மத்திய குழுக்களில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்குப் பேரும், மற்றெல்லா மத்திய கட்சி ஸ்தாபனங்களில் மூன்றில் இரண்டு பங்கு பேராவது கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது காங்கிரசுக்கு முன்பு மூன்றாவது அகிலத்தில் சேருவதற்கு தங்களது ஒப்புதலை பகிரங்கமாகவும் குழப்பபம் இன்றியும் தெரிவித்த தொழிலாளர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். மூன்றாவது அகிலத்தின் நிர்வாகக் குழுவின் சம்மதத்தோடு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம்.
(Lenin collected works vol. 31)
‌ஆரம்பத்தில் சொன்னதுபோல சிபிஐ சிபிஎம் கட்சிகள் கம்யூனிசத்தின் பெயரால் முதலாளித்துவ கும்பலில் ஒரு பிரிவினரின் ஆட்சிக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். புரட்சியாளர்களோ அதிகாரவர்க்க மூலதனத்திற்கு எதிராகவும் நிலவும் ஆட்சி அதிகார கும்பலுக்கு எதிராகவும் சரியான வர்க்கப் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் திறமை அற்றவர்களாக இருக்கின்றனர். கம்யூனிசத்திற்கு ஆளுக்கு ஒரு வகையாக விளக்கம் கொடுத்து மக்களை குழப்புகின்றனர். மக்கள் கம்யூனிஸ்டுகள் பக்கம் வர தயங்குகின்றனர்(அவை பல காரணம் இருந்தாலும் இவையும் ஒன்று), நாட்டு பாதுகாப்பு என்ற பெயரில் பெரு முதலாளி வர்க்கத்தின் தரப்புக்கு ஓடிச்சென்று பாட்டாளி வர்க்க புரட்சிக்கு துரோகமிழைக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கலைப்புக்கு இட்டுச்சென்ற காவுத்ஸ்கியால் தலைமை தாங்கப்பட்ட இரண்டாம் அகிலத்தில் துரோகத்தை முறியடித்து லெனின் தலைமையில் போல்ஷ்விக் கட்சி மாபெரும் அக்டோபர் சோசலிசப் புரட்சியை வெற்றிகரமாக நிகழ்த்தியது .இதனால் உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்டுகளுக்கு உத்வேகம் அளித்து புரட்சிகரமான மூன்றாவது அகிலத்தை உருவாக்க வழிகோலியது . உலக நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி உருவாவதற்கு வழிகாட்டியாக இருந்துள்ளது. ரஷ்யாவின் படிப்பினைகள் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட்டது என்றும் அதேபோல் இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் அதனை சரியாக பயன்படுத்தி தன்னுடைய கட்சியை கட்டவில்லை என்பதே நம் விமர்சனங்கள்.
‌ குறுங்குழு வாதம் சுயநல அடிப்படையில் குழுக்கள் அமைத்தல் போன்ற தடையாய் இருந்த உள்ளவற்றை சரியாக கையாண்டு கட்சி கட்டப்படவில்லை என்பதே நம்முன் உள்ள விமர்சனங்கள். மார்க்சிய-லெனினிய அமைப்புகள் அமைக்கும்போது ஆயுதப் போராட்டமே முதன்மையானது குழு நடவடிக்கை போற்றுதல், வெகுஜன அமைப்பு மற்றும் வெகுஜன போராட்டம் மறுத்தல் மக்களை புரட்சிக்கான புரட்சிகரமான உணர்வில் அணிதிரட்டாமை, சட்ட ரீதியான மற்றும் சட்டவிரோதமான போராட்டங்களை இணைக்க மறுத்தல் போன்ற இடதுசாரி குறுங் குழுவாத போக்கில் கட்சியை தள்ளியது.
ஆகவே தான் கம்யூனிஸ்ட் கட்சி என்ற முறையில் அதற்கே உரிய பொது தன்மையையும் இந்தியாவுக்கான கம்யூனிஸ்ட் கட்சி என்ற ரீதியில் அதற்கான குறித்த தனித்தன்மையும் கொண்டு கட்சி இயங்க வேண்டும் எனவே அமைப்பு ரீதியிலும் ஓரளவுக்கு அரசியல் ரீதியிலும் கட்சியை சரிசெய்வதற்கு மூன்றாம் அகிலம் முன்வைத்து கோட்பாடுகளை இங்கே விவாதித்தோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *