NRC and Detention center

இன்று அதிகாலை ஒரு புரட்சியாளருடன் வாக்குவாதம் அதற்க்காக தேடிக் கொண்டிருக்கும் போது அதிர்ச்சி தரும் பல தகவல்கள் அதனை கொஞ்சமாக பதிவு செய்யவே இந்தப் பதிவு…

பாசிசம் கதவை தட்டினால்தான் இவர்கள் விழிப்பார்கள் போல் உள்ளது என்னே செய்ய எதிரி குரூரமாக மற்றும் வேகமாக நம்மை தாக்க நினைக்கிறான் நாமோ வெற்று விவாதங்களில் நேரத்தை வீண் செய்துக் கொண்டுள்ளோம், பலர் விரக்த்தி அடைந்தாலும் தனது ஒற்றுமையை நிறுவப் போவதில்லை இடதுசாரிகள் பாசிசம் காவு கொண்ட பின் எழுதியோ பேசியொ ஒன்றும் ஆகப் போவதில்லை!

நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியது, குடியுரிமை சட்டங்களை அமல்படுத்த ரூ8500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது ஆங்காங்கே Detention center (வதை முகாம்கள்) கட்டும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மோடி பேசுகிறார் NRC என்றால் என்னவென்றே தெரியாதென்று அவரது அமைச்சர் 2024 குள் நாடு முழுவதும் NRC முடித்திருப்போம் என்று கொக்கரிக்கும் பொழுது நமது தோழர் நினைப்பது போல் இவை ஒரு சிலரை பாதிப்பதில்லை ஒட்டு மொத்த நாட்டு மக்களையும் பாதிக்கப் போகிறது. இங்கே மக்களின் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று கொள்ளை அடிக்கும் நாட்டில்தான் NRC க்காக ரூ 8500 கோடி ஒதுக்கியுள்ளது இந்த பாசிச காவி அரசு. இதனை தெளிவாக அறிந்துக் கொள்ள அசாம் படிப்பினையில் இருந்து வருவோம்…இந்த குடியுரிமை நீக்கப்பட்டவர்கள் பட்டியலில் சாமானியர்கள் மட்டும் இல்லை, கார்கில் போரில் இந்தியாவிற்கான போராடிய ராணுவ அதிகாரி முகம்மது சனாவுல்லாவும் அடங்குவார், இவரையும் அசாமில் உள்ள கோவால்பாரா மத்திய சிறையில் அடைத்து வைத்தார்கள் எனில் என்ன நிலைமை என்பதை நீங்கள் தான் யூகிக்க வேண்டும்.

இந்த பட்டியலில் முன்னால் ராணுவ வீரர்கள், சி.ஆர்.பி.எப் வீரர்களின் பல குடும்பங்கள் இடம்பெறவில்லை, இதை எல்லாம் விட முன்னாள் இந்திய ஜனாதிபதி பக்ருத்தீன் அலியின் குடும்பத்தாரும் கூட இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

அசாமில் நடத்தப்பட்ட NRCக்கு செலவிடப்பட்ட தொகை ரூ.1600 கோடி. அதாவது 3.30 கோடி நபர்களுக்கு ரூ.1600 கோடி எனில் ஒரு நபருக்கு ஆன செலவு ரூ.399. இந்தியாவின் ஜனத்தொகை 137 கோடி, மொத்த இந்தியாவிற்கும் NRC செய்தால் ஆகும் செலவு ரூ.54,663 கோடிகள். இன்று நம் தேசமே பொருளாதார முட்டுச் சந்தில் சிக்கித்தவிக்கிற போது ஏற்கனவே ஜி.எஸ்.டி உள்ளிட்ட பல தொகைகளை மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்காமல் இழுத்தடித்து வரும் வேளையில் இந்த புதிய ரூ.54,663 கோடி செலவை யார் ஏற்பது.

அசாமில் 3000 பேரை அடைத்து வைக்க கட்டப்பட்ட ஒரு சிறைச்சாலையின் செலவு ரூ.45 கோடிகளாம். அப்படியெனில் 19 லட்சம் பேரை இதே பாணியில் அடைத்து வைக்க ஆகும் செலவு என்ன?? அசாம் சிறைக்கு மட்டும் ரூ.30,000 கோடிகள் செலவாகும்..

இனி NRC கு தயாராக என்ன செய்ய வேண்டும் வாட்சாப் பதிவு கீழே…..

மோடி-ஷாவின் குரூரம் புரிய!
கட்டாயம் படியுங்கள்!

1940 ல் உள்ள பத்திரம் என்னிடம் இருக்கிறது.. ஆனால் எனக்கே இதை படித்து முடிக்கும்போதே பகீரென்றிருக்கிறது..
அப்பாவி மக்களின் நினைத்துப்பாருங்கள்… எவ்வளவு கொடூரமானவர்கள் இவர்கள்..

பொறுமையாக படியுங்கள்;
#அவசியம் #படியுங்கள்

CAA(CAB) & NRC …

முடிந்தளவு சுருக்கமாக விவரிக்கிறேன் …

NRC. சொல்வது என்ன …

“Simply being born in India or having parents who were born in India is not enough …The NRC requires you or your parents to have been born before a certain cut -off date and the cut-off date is March 24,1971 …”

புரிகின்றதா வில்லங்கம் …

நீங்களோ உங்கள் பெற்றோரோ இந்தியாவில் பிறந்திருப்பதால் மட்டுமே நீங்கள் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் அல்ல …

நீங்கள் குறிப்பிட்ட கட்ஆப் தேதிக்கு முன்பே இந்தியாவில் உள்ளீர்கள் என்பதை நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும் …!

பொதுவாக குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி காவல்துறைதான் ஒருவர் குற்றவாளி என்பதை நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் …

ஆனால் NRC படி நீங்கள் குடிமகன்தான் என்பதை தகுந்த ஆதாரங்களுடன் (Documentary Evidences) ஆவணங்கள் மூலமாக நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும் …

சரி …அதற்கு என்ன டாகுமெண்ட்ஸ் தேவை என்பதைப் பார்ப்போம் …

LIST A மற்றும் LIST B என இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட டாகுமெண்டுகள் உங்களிடம் இருக்க வேண்டும் …

LIST -A …

1.Electoral rolls upto March 25,1971
2.NRC of 1951
3.Land and Tenancy Records
4.Citizenship certificate
5.Permanent resident certificate
6.Passport
7.Bank or LIC documents
8.Permanent Residential Certificate
9.Educational certificates and court orders
10.Refugee Registration certificate

LIST -B

1.Land documents
2.Board or university certificates
3.Bank/LIC/Post office records
4.Birth certificate
5.Ration card
6.Electoral rolls
7.Other legally acceptable documents
8.A circle officer or Grama panchayat secretary certificate for married women

விஷயம் என்னவென்றால் LIST – A டாகுமெண்ட்ஸ் கட் ஆப் தேதிக்கு முந்தியதாக இருக்க வேண்டும் …அதாவது மார்ச் 25,1971 க்கு முந்தைய டாகுமெண்ட்ஸ்ஸாக அவை இருக்க வேண்டும் …!!

வில்லங்கம் புரிகிறதா …

இந்த LIST -A டாகுமெண்ட்ஸ்ஸுக்கு சப்போர்டிவ்வாக LIST -B டாகுமெண்ட்ஸ்ஸை நீங்கள் காட்ட வேண்டும் …!!

உங்களில் எத்தனை பேருக்கு இது சாத்தியப்படும் என்பதை நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள் …

உங்களால் அப்படிக் காட்ட இயலவில்லையென்றால் உடனடியாக நீங்கள் கைது செய்யப்பட்டு Detention Camp ல் அடைக்கப்படுவீர்கள் …!

அஸ்ஸாமில் உள்ள Detention Camp என்பது அங்குள்ள சிறைச்சாலைகள்தான் …!

ஆக …மேற்கூறிய டாகுமெண்டுகள் இல்லையென்றால் நீங்கள் சிறைக்குச் செல்வீர்கள் …மனைவி,குழந்தைகளுடன் …!!

மேல்முறையீட்டிற்கு நீங்கள் Foreign Tribunalல் வழக்கு நடத்தலாம் அல்லது Concern High Courtல் வழக்கு நடத்தலாம் …

அதிலும் ஸ்டே அல்லது ஜாமீன் கிடைத்தால் மட்டுமே நீங்கள் வெளியே வர இயலும் …!!

அதனால்தான் சொல்கிறேன் பாஜக மக்களுக்கு எதிரான கட்சி என்று …

இதனால் பெருவாரியாகப் பாதிக்கப்படுவது இந்துக்களே …!

பல இலட்சம் இந்துக்கள் Detention Campல் சொத்திழந்து,மானம் இழந்து மனைவி குழந்தைகளுடன் சிறையில் உள்ளார்கள் …!!

இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் பகீர் என்கிறதல்லவா …

நாடு முழுவதும் இதே NRC கணெக்கெடுப்பு நடத்தப்படும் என பாஜக நேற்று பகிரங்கமாக அறிவித்து விட்டது …

1951லிருந்து ஆவணங்கள் வைத்திருப்பவர்கள் தாராளமாக மகிழ்ச்சியாக இருங்கள் …

நான் விசாரித்தவரை பலரும் ரேஷன் கார்டு,ஆதார் கார்டு தவிர ஒன்றுமில்லை என்றே சொல்கிறார்கள் …

இந்த NRC பயங்கரத்தை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம் …!

அத்தனை டாகுமெண்ட்டுகள் இருந்தாலும் ஒவ்வொரு அரசு அதிகாரியிடம் நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும் …

இளம்பெண்களின் கதி என்னாகும் …

சாதாரண எக்ஸாம் இன்டர்னெல் மார்க் போடவே மாணவிகளை படுக்கைக்கு அழைக்கும் காலம் இது …!

குடியுரிமை தருவது என்றால் சும்மாவா …எது வேண்டுமானாலும் நடக்கும் ….

ஒரு வழக்கறிஞராக …

நான் சொல்வது இந்த #CAA வே நமது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு ஆர்ட்டிக்கிள் -14 க்கு எதிரானது …

என உறுதியாகச் சொல்லுவேன் …

NRC யைப் பொறுத்த வரை …

நாங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு ரயிலை விற்போம், துறைமுகத்தை விற்போம், நிலத்தை விற்போம்,பொதுத்துறை நிறுவனங்களை விற்போம் …

மீறிக் கேள்வி கேட்டால் …

நீ இந்தியனா என்று திருப்பிக் கேட்போம் …நீ டாக்குமெண்டைத் தூக்கிக் கொண்டு திரிய வேண்டியதுதான் …

டாகுமெண்ட் இல்லாதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது Detention Camp …

முடிவு இனி 130 கோடி மக்கள் கைகளில் …

தட்ஸ் ஆல் …

தோழமையுடன்
-வழக்கறிஞர் திலகர்

**மூத்த வழக்கறிஞர் #ThilakarSspk அவர்கள் பதிவு… அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் உரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் வழக்கறிஞர்கள் அனைவருக்கும் இந்த சட்டம் எந்த அளவிற்கு மக்களுக்கு எதிரானது என புரியும்.

அந்த தோழர் புரிந்துக் கொள்ள இதுவரை (Detention Camp ) அந்தக் கேம்பில் 25 பேர் இறந்துள்ளனர் அதற்க்கான ஆதரம் கீழ் உள்ள இணைப்பில் உள்ளது தெரிந்துக் கொள்ள….
https://wordpress.com/block-ed…/…/ilakkaithedi.home.blog/210