1ஜி(1G), 2ஜி(2G) , 3ஜி(3G) , 4ஜி(4G) என்றால்

ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன ? மின்காந்த அலைகள் மூலமாக ஒலியை கடத்த முடியும் என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பின் விளைவே வானொலி. இதைத் தான் ஆங்கிலத்தில் ஸ்பெக்ட்ரம் என்று அழைக்கிறார்கள். அதே போல, தொலைபேசிச் சேவைகள், தொண்ணூறுகள் வரை, கம்பி மூலமான இணைப்புகள் வழியாகவே வழங்கப் பட்டு வந்தன. அதன் பிறகு ஏற்பட்ட தொழில் நுட்பப் புரட்சி காரணமாக காற்றின் வழியாக உரையாடல்களை அனுப்ப முடியும் என்ற நிலை வந்த்து. இதன் முடிவே, 1ஜி எனப்படும் முதல் தலைமுறை சேவைகள். 1 என்பது முதல் என்பதற்கும், ஜி என்பது ஜெனரேஷன் (தலைமுறை) என்பதன் சுருக்கமாகவும் 1ஜி என அழைக்கப் படுகிறது.

இந்த தொழில்நுட்பம் மிக மிக வசதியாகவும், கம்பிவட இணைப்பு இல்லாத இடத்திலும் பெரிதும் பயன் பட்டது. உயரமான மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் பணிபுரியும், எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் ராணுவத்தினருக்கு, இந்த சேவை பெரிய அளவில் பயன்படும் என்பதை உணர்ந்த அரசு, இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் உரிமையை தனியார் நிறுவனங்கள் எதற்கும் தராமல், ராணுவம் மற்றும் காவல்துறை பயன்பாட்டுக்கு மட்டுமே அனுமதித்தது.

முதல் தலைமுறை தொழில்நுட்பத்தில் ஒரு பெரிய பின்னடைவு, ஒரு பக்கம் இருக்கும் நபர் பேசி முடித்த பிறகே, அடுத்த பக்கத்தில் இருக்கும் நபர் பேச முடியும். மேலும், 1ஜி தொழில்நுட்பத்தில் பேசுவதற்காக பயன்படுத்தப் படும் கருவிகள் அதிக பேட்டரி சக்தியை இழுக்கும். இதனால் இந்தக் கருவிகள் அளவிலும் பெரிதாக இருக்கும். இன்று சாலைகளில் மணிக்கணக்கில் செல்போன்களை காதோடு இணைத்த படி, இளைஞர்களும், இளைஞிகளும் பேசிக் கொண்டு செல்வதை பார்க்கிறோம். இதற்குப் பதிலாக, ஓவர் என்று சொன்ன பிறகுதான் பேசமுடியும் என்ற நிலை இருந்தால், நிம்மதியாக ‘கடலை’ போட முடியுமா ? குறுஞ்செய்தி அனுப்ப முடியுமா ? வாழ்க்கை எத்தனை கடினமாக இருந்திருக்கும்…. ? அப்பப்பா செல்போன் இல்லாத வாழ்க்கையா ? நினைத்துப் பார்க்கவே கடினமாக இருக்கிறதல்லவா ?

இந்த சூழலில் தான் 2ஜி வருகிறது. 2ஜி அறிமுகப் படுத்தப் படுத்தப் படுவதற்கு முன்பு, தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தொலைபேசி என்றாலே லேண்ட்லைன் மட்டும் தான். அதுவும், அரசு தொலைபேசி தான். உங்கள் எக்சேஞ்சின் அளவைப் பொறுத்து, பதிவு செய்து விட்டு காத்திருக்க வேண்டும். இணைப்பு வழங்கப் படுவதற்கு, ஒரு ஆண்டு ஆகலாம், இரண்டு ஆண்டு ஆகலாம், ஐந்து ஆண்டுகள் கூட ஆகலாம். 1991ல் தாராளமய பொருளாதார கொள்கைகள் அமலுக்கு வந்ததும், தொலைத் தொடர்புத் துறையிலும் பெரும் மாற்றம் வருகிறது.

ஸ்பெக்ட்ரம் என்பது அடிப்படையில் மனிதர்கள் உருவாக்குவது அல்ல. அது தண்ணீர், பால், மணல், மலைகளைப்போல் ஒரு இயற்கைச் செல்வம். அதாவது கம்பி வழியாக மின்சாரம் பாய்வதைப்போல வளிமண்டலத்தின் வழியாக (காற்றணுக்கள்) மின்காந்த அலைகள் பரவுகின்றன. இந்த மின்காந்த அலைகள் மூலமாகத்தான் நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற வானொலி, தொலைக்காட்சி, செல்லிடைப்பேசி முதலானவை இயங்குகின்றன.FM(30)                                 2G(30)                                    3G(8)ஸ்பெக்ட்ரம்                    ஸ்பெக்ட்ரம்                      ஸ்பெக்ட்ரம்–|——————|——–IV——-|———————–|———-IV——-|——————–|—85mhz           110mhz           710mhz            1880mhz              1920mhz           2170mhzமேற்கண்ட படத்தில் உள்ளவாறு ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்களுக்கு உட்பட்ட இடைவெளியை அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) என்றழைக்கிறோம். அப்படியாக 1710 Mhz முதல் 1880 Mhz க்கு உட்பட்ட பகுதி 2G (இரண்டாம் தலைமுறை) ஸ்பெக்ட்ரம் என்றழைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட ஊரில் / இடத்தில் மேற்கூறிய இடைவெளியில் சுமார் 10 நிறுவனங்கள் தான் 2G சேவையை வழங்க முடியும்.. 3G-யை 7 அல்லது 8 நிறுவனங்கள் தான் வழங்க முடியும். இந்தப் பற்றாக்குறையையும், மக்கள் தேவையையும், மற்ற செல்போன் நிறுவனங்களின் சந்தைப்போட்டியையும் பயன்படுத்தி அலைக்கற்றை ஒதுக்கப் படுகிறது.

மொபைல் தொழில்நுட்பம்   புதிய தலைமுறைக்கு ஏற்றவாறு வளர்ந்து கொண்டே உள்ளது.மொபைல் இல்லாத ஒருவரை பார்க்கவே அரிதாக இருக்கும் அளவுக்கு மொபைல்-ம் அதன் தொழில்நுட்பமும் வளர்த்துள்ளது.மொபைல் தொழில்நுட்பத்தின் ஆரம்பம் மற்றும் பின்வந்த ஒவ்வொரு தலைமுறையிலும் என்னென்ன வசதிகள் மேம்படுத்தப்பட்டன என பார்ப்போம்.                             

1ஜி(1G) (First Generation):(1981)

                   1ஜி என்பது முதல் தலைமுறை தொழில்நுட்பம். 1G ஒரு அனலாக் சிக்னல் .1G-ல் அனலாக் டிரான்ஸ்மிஷன்(analog transmission) நுட்பம் குரல் சமிக்ஞைகளை(Voice Signals) கடத்த பயன்பட்டது.

                 இதில் AMPS(Advanced Mobile Phone System) ,Total Access Communication System(TACS & Extended TACS ,Narrowband TACS,Japanese TACS),Nordic Access Communications(NMT)450 & 900), C-NETZ, Radiocom2000, Radio Telephone Mobile System(RTMS), Nippon Telephone & Telegraph என்று வெவ்வேறு தரங்களில்பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு தரத்திலும் அதிர்வெண் பண்பேற்றம்(frequency modulation) நுட்பம் குரல் சமிக்ஞைகளுக்கு பயன்படுத்தினர்.மிகக் குறைந்த அளவே அலைக்கற்றை வேகம் இருக்கும்.

                    இதில் தரவு பாதுகாப்பு (Data Security) மற்றும் மறையாக்கம்(encryption) எதுவும் இல்லாததால் யார் வேண்டுமானாலும் உரையாடலை எளிதில் பிழைகளை பயன்படுத்தி கேட்டு விட முடியும்.அது மட்டுமில்லாமல் குறைவான குரல் தரம் மற்றும் தேவையல்லாத தலையிடுதல்கள் ஏற்படும்.

2ஜி(2G) (second Generation):(1991)

                   1ஜி க்கு பிறகு வந்தது தான் 2ஜி தொழில்நுட்பம். 2G ஒரு  Digital Signal. 2G ஆனது TDMA(Time Division Multiple Access) அல்லது CDMA(Code Division Multiple Access) முறையில் இயங்கியது. இந்த தொழில்நுட்பம் GSM(Global System For Mobile Communication) என்று அழைக்கப் படுகிறது.

                  Digital Signal-பலமான பிணைப்பு தேவை எனவே குறைவான சமிக்ஞைகள் உள்ள இடத்தில் பிணைப்பை ஏற்படுத்துவது கடினமாகிறது.2ஜி தொழில்நுட்பம்  பேசும் வசதி, எஸ்.எம்.எஸ் வசதி(சம்ஸ்), புகைப்படம் அனுப்புதல்,  எம்.எம்.எஸ்(MMS) போன்ற வசதிகளைக் கொண்டது. 1G தொழில்நுட்பத்தை விட சிறந்த குரல் தரம் நிலையானதாக இருந்தது.

              பின் அறிமுகமான (1997)GPRS,  2.5 G என்று அழைக்கப்படுகிறது.GPRS-ல் இணையம்(WEB) 144 kbps வரை வேகமாக இருந்தது.GPRS Wireless Application Protocol(WAP)-ல் இயங்குகிறது..பின்  EDGE (Enhanced Data for Global Evolution or EGPRS)(1999)-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.இது 2.75G என்று அழைக்கப்படுகிறது.

3ஜி(3G) (Third Generation):(2001)

                2ஜி க்கு பிறகு வந்தது தான் 3ஜி தொழில்நுட்பம் மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பமாகும்.  வேகம் 144 kbps ல் இருந்து 2 mbps வரை அதிகப்படுத்தப்பட்டது.இது UMTS(Universal Mobile Telecommunication Syatem)) என்று அழைக்கப் படுகிறது.

               HSPA, 3.5G என்று அழைக்கப்படுகிறது .இதன் மூலம் மேலும் இணைய வேகம் அதிகப்படுத்தப்பட்டது.  HSPA ஆனது HSDPA மற்றும் HSUPA நெறிமுறையை(protocol)  உள்ளடக்கியது. பின் HSPA +(42MBPS) Protocol  3ஜி யின் வேகத்தை மேலும் அதிகப்படுத்தியது.3G-தொழில்நுட்பத்தில்  குரல் தரம் (Voice Signals),அதிக பாதுகாப்பு, தனியுரிமை பாதுகாப்பு, மற்றும்  வீடியோ அழைப்பு (Video Calling), மொபைல் டிவி போன்றவற்றை பெற முடியும்.

4ஜி(4G)(Fourth Generation):(2011)

                இது LTE-(Long Term Evolution) என்று அழைக்கப் படுகிறது.4G ஆனது 3G -யை விட வேகம் அதிகமானது. தற்போது மிகப் பெரிய நகரங்கள் மற்றும் விமான நிலையங்களில் மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.4G இணையத்திற்காகவே மேம்படுத்தப்பட்டது.

                    4G-ன் வேகம் அதிக இயக்க தொடர்பில்(High Mobility)  அதிக பட்சம் 100Mbps download- 50Mbps upload வேகத்தில் தரவுகளை (data) பெறவும் மற்றும் குறைந்த இயக்க தொடர்பில் (Low Mobility) 1Gbps-ல் தரவுகளை பெற முடியும்..இது MIMO(Multiple In Muultiple Out ) தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது.